பயணச் செலவை வாங்க மறுத்த சுவார்ட்ஸ்*
ஆலயப் பிரதிஷ்டைக்கு வந்த சுவார்ட்ஸ் ஐயருக்குப் பயணம் செலவிற்காக ( குளோரிந்தா நாறு ரூபாய் கொடுத்தார் , சுவார்ட்ஸ் ) அதை ஏற்க மறுத்து தாம் அந்தப் பணத்தை வாங்கினால் *பணத்திற்காக சுவார்ட்ஸ் ஊழியம் செய்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள்* என்று கூறினார் . மற்றும் குளோரிந்தாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் செய்த *பாவங்களைக் கண்டிக்காமல் சுவார்ட்ஸ் இருந்து விட்டார்* என்று தம்முடைய ஊழியத்தைக் குறை கூறுவார்கள் என்றும் நினைத்தார்.
அதுவும் அல்லாமல் குளோரிந்தா பணக்காரியானபடியால் தன் பணத்தைக் கொடுத்து தான் நினைத்தக் காரியங்களைச் செய்து விடுவாள் என்று அவளைக் குறித்து , ஜனங்கள் தவறாகப் பேசுவார்கள் என்று , குளோரிந்தா கொடுத்த நூறு ரூபாயைச் சுவார்ட்ஸ் வாங்க மறுத்து விட்டார்.
இன்றைய ஊழியக்காரர்கள் தங்கள் வாயைத் திறந்தாலே பணம் , பணம் வேண்டுமெனப் பிரசங்கிக்கிறார்கள்.
எழுதினால் , எங்களுக்கு நன்கொடை அனுப்புங்கள் என்று எழுதுகின்றார்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் , அப்போஸ்தலர் 20 : 35 இல் , *" இப்படிப் பிரயாசப்பட்டு பலவீனரைத் தாங்கவும் , வாங்குவதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான் ”*
என்று சொன்னதை அறியாதிருக்கிறார்கள்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment