மிஷனரி சாமுவேல் சுவேமேர் நினைவு தினம்* 02 ஏப்ரல்
இஸ்லாமியர்களின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்ட சாமுவேல் சுவேமேர் 1867ம் ஆண்டு பிறந்தார் . கிறிஸ்தவ முறைப்படி வளர்ந்த இவர் சிறுவயதிலேயே மிஷனெரி தாகம் உடையவராகக் காணப்பட்டார் .
இவரது சகோதரி நெல்லி சுவேமேர் என்பவர் 40 வருடங்கள் சீனா தேசத்தில் மிஷனெரியாக பணி செய்தவர் . க ல் லூ ரி யி ல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ராபர்ட் வில்டர் என்ற மிஷனெரியின் சவாலான செய்தியினால் தொடப்பட்டார். தன்னை ஆண்டவர் மிஷனெரிப் பணிக்காக அழைப்பதை உணர்ந்தார் . எனவே , அரேபிய உலகிற்கு செல்ல தீர்மானம் செய்தார்.
ஆனால் , இவரை பொருளுதவி செய்து தாங்கவும் , உற்சாகப்படுத்தவும் எவரும் முன்வரவில்லை .
சுவேமர் தன் நண்பர் ஜேம்ஸ் கேண்டினுடன் இணைந்து ஜெபிக்க ஆரம்பித்தார்.
இருவரும் ஒரே தரிசனம் உடையர்களாக ஒற்றுமையாக செயல்பட ஆரம்பித்தனர் . ' *அரேபியன் மிஷன்* ' என்ற இயக்கத்தை ஆரம்பித்து , அதற்கான உதவிகளை பலரிடமிருந்தும் கேட்டுப் பெற்றுக் கொண்டனர்.
தங்களின் மிஷனெரிப் பயணத்திற்கான உதவிகள் அனைத்தும் கிடைத்தவுடன் , 1889ல் இருவரும் அரபியாவிற்கு மிஷனெரியாக சென்றனர்.
சாமுவேல் சுவேமர் பாரசீக வளைகுடா பகுதியில் தன் பணிகளை ஆரம்பித்தார்.
தெருக்களில் நின்றும் , பொதுக்கூட்டங்கள் கூட்டியும் , வீடு வீடாக சென்றும் மக்களை கிறிஸ்துவிடம் வழிநடத்தினார்.
ஊழியப் பாதையில் வரும் இன்னல்களோ ஏராளம் . 1904ம் ஆண்டு ஸ்வேமேர் 4 மற்றும் 7வயதான தன் இரு சிறு மகள்களையும் மரிக்கக் கொடுத்தார்.
வேதனையிலும் *முன்வைத்த காலை பின் வைக்காமல்* உறுதியுடன் பணிபுரிந்தார்.
1912ம் ஆண்டு அனைத்து இஸ்லாமிய ஊழியங்களை வழிநடத்தும் பொறுப்பை பெற்றார்.
17 வருடங்களாக *காய்ரோவைமையமாக* வைத்து உலகின் பல பாகங்களுக்கும் சென்று இஸ்லாமியர்களை இயேசுவுக்குள் நடத்திய இவர் மகத்தான தேவ மனிதர்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ..
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment