புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஊழியம் செய்யாத உபதேசிமாரின் நீக்கம் - ரேனியஸ்

ஊழியம் செய்யாத உபதேசிமாரின் நீக்கம்*
பயனற்ற , கனியற்ற ஊழியம் செய்த உபதேசிமார்களை ஊழியத்திலிருந்து நீக்கினார். அவர்களால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட திருச்சபை பாழாவதை ரேனியஸ் விரும்பவில்லை. *ஊழியன் வேறு வழியாய்ச் சம்பாதித்துக் கொள்ளலாம்* என ரேனியஸ் கூறினார்.
படுக்கப்பத்து உபதேசியாரை சபையார் மிகவும் நேசித்தார்கள் படுக்கப்பத்தில் அவர் பத்தாண்டுகளாக ஊழியம் செய்தார். ஆனால் *சபையார் வேத அறிவில் வளர்ச்சியடையவில்லை* சபையார் வேத அறிவைப் பெற வேண்டுமானால் வேறு உபதேசியாரை நியமிக்க வேண்டும். வேறு சபைக்குப் படுக்கப்பத்து உபதேசியாரை அனுப்பினால் அங்குள்ள சபையாரும் வேதஅடைய மாட்டார்கள். எனவே ரேனியஸ் அவரை பதவி நீக்கம் செய்தார் . இன்றைக்குப் படுக்கப்பத்தில் சபையில்லை . சபையார் சொன்னார்களென்று பொய்யான பிராது கொடுத்த பதேசியாரும் நீக்கப்பட்டார். *உபதேசியார் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.*
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory