புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஊழியத்தின் பிரச்சனைகள்- ரேனியஸ்

ஊழியத்தின் பிரச்சனைகள்*
1827இல் சென்னையிலிருந்து பாளையங்கோட்டை திரும்பிய ரேனியஸிற்கு மன வேதனையைத் தரும் கடிதத்தை லண்டன் நகர் C . M . S . காரியதரிசி பிக்கஸ் டெத் ஐயர் எழுதியிருந்தார்.
பிராமணர்களும் , உயர் சாதியினரும் ஏன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு ரேனியஸ் *கல்கத்தா நாட்குறிப்புகள்* என்ற வரலாற்றுப் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய பதில் அவருக்கும் , கல்கத்தாவிலுள்ள C . M . S . கமிற்றியினருக்கும் , ஆர்ச் டீக்கனுக்கும் கோபத்தை மூட்டியது.
அப்பத்திரிக்கையில் பிராமணர்களும் , உயர் சாதியினரும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணம் *அரசுக் கிறிஸ்தவ அரசாயிருக்கிறது.*
ஆனால் இந்து மதத்தை ஆதரிக்கிறது.
அதின் கோவில்களுக்கு மானியம் உதவித் தொகையும் கொடுக்கிறது.
இதுதான் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் என்று எழுதியிருந்தார் . அதுமுதல் அவர்கள் ரேனியஸ் ஐயர் மேல் குற்றம் கண்டுபிடிக்க முயன்றனர் . ரேனியஸ் ஐயரும் , ஷ்மிட் ஐயரும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஊழியம் செய்தனர்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ..
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory