புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பாளை மேரி ஆர்டன் நடுநிலைப்பள்ளி - ல்பர்ட் ஹென்றி ஆர்டன்

பாளை மேரி ஆர்டன் நடுநிலைப்பள்ளி*
கனம் ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன் என்னும் பெரியார் ஆங்கில மிஷனெரியாக இந்தியாவில் பெசவாடா , மசூலி பட்டணம் , எலூர் , சென்னை ஆகிய இடங்களில் ஊழியம் செய்தார்.
அன்னாரின் புதல்வி மேரி இசபெல்லா ஆர்டன் 1869 ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பிறந்தார் .
மேரி இசபெல்லா ஆர்டன் பெயரால் கனம் ஆாடன் மிஷனெரி அவர்கள் 1895 ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை வடக்குப்படை தெருவிலுள்ள ஒரு வாடகைக் கட்டிடத்தில் மேரி ஆர்டன் என்ற பெயரில் இந்தப் பள்ளியை ஆரம்பித்தார் .
அப்பொழுது நெல்லை மண்டிலம் , சென்னைப் பேராயரின நிர்வாகத்தினுள் இருந்தது.
12 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்டது . இப்பள்ளி இன்று நெல்லைத் திருமண்டிலத்திலேயே மாபெரும் நடுநிலைப்பள்ளியாக மிளிர்கிரது.
இவ்வட்டாரத்தில் பெரும் கல்விமான்களைத் மறுவித்துள்ளது.
இதன் முதல் ஆசிரியர் சுவாமியடியான் . சாராயம் வடிக்கப்பட்டும் சூதாட்டம் நடத்தப்பட்டும் வந்த இடத்தில் மேரி ஆர்டனின் முதல் கட்டிடம் கட்டப்பட்டது.
பாளை நகர் தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் நகர் என்று பேர் பெற இக்கல்விக்கூடமும் பாதை அமைத்துக் கொடுத்தது.
தூய யோவான் உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகத்திடம் இருந்து வந்த இப்பள்ளி 1952 முதல் பாளையங்கோட்டை சபை சர்ச்சின் நிர்வாகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்று பாளை குருசேகர பள்ளியாகத் திகழ்கிறது .
*பாளை - மேரி ஆர்டன் பள்ளியின் வரலாற்றுப்பாடல்*
ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன்
ஆங்கில ஊழியராம் இந்தியாவில் '
ஆர்வமுடன் பெசவாடா மசூலி சென்னை
ஆகிய நகர்களில் அருட்பணி செய்தார்.
அன்னாரின் அரும்தவப் புதல்வி '
அவர்பேர் மேரி இசபெல்லா ஆர்டன் '
அண்ணல் காந்தி பிறந்த அதேநாள் '
அம்மையார் ஆர்டன் பிறந்த நன்னாள்.
ஆயிரத்தெண்ணூற்று பத்தொன்பதாம் '
ஆண்டு திசம்பர் திங்கள் மூன்றாம் தேதி '
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும் ,
மேரி ஆர்டன் அம்மையார் பிறந்தார்.
அவர் திருநாமம் என்றும் விளங்கவே
ஆயிரத்தெண்ணூற்று
தொண்ணுத்தைந்தாம் ஆண்டுதனில் பாளை மேரி ஆர்டன்
அறிவாலயம் ஆரம்பம் ஆனதே ?
ஆண்டவரின் சீடர்போல் பன்னிருபேரால்
ஆரம்பம் ஆன பள்ளி இன்று ஆயிரமாய் பெருகி
ஆலவிருட்சமாய் தழைத்து நூறாண்டு காணும் மேரி
ஆர்டன் நடுநிலைப்பள்ளியே , நீ வாழ்க !
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory