ஆதிகாலத்து உபதேசியார்களின் அர்பணிப்பு ஊழியங்கள்*
ஏசுவடியான் உபதேசியார்
1805ம் ஆண்டில் படுக்கப்பத்து , ஆத்திக்காடு , கலசேகரப்பட்டிணம் முதலிய இடங்களில் இந்துக்களால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.
ஆத்திக்காடு எசுவடியான் உபதேசியாரைப்பிடித்து இம்சித்து , அவர் நெற்றியில் நீறு பசி நிந்திக்க இந்துக்கள் முயற்சிக்கையில் , சில வாலிபர் அங்கு தோன்றி அவரை விடுவித்தனர் . பத்து , பன்னிரண்டு பேரான இவ்வாலிபர் யார் , எவ்வூரார் , என்று இவ்விபரங்களை எழுதின மணப்பாடு சிரேஷியன் | என்பவர் , கூறாவிட்டாலும் அவர்கள் யாராகத்தானிருக்கக்கூடும் என்பதை நாம் கிரகித்துக்கெள்ளலாம்.
அவ்வாலிபர் போன பின்பு படுக்கப்பத்திலிருந்து ஒரு படைதிரண்டு வந்து , கிராமத்தினுட்புகுந்து , ஏசுவடியானைப் பிடித்து , நிர்வாண கோலாமாக்கி இரக்கமின்றி அடித்து.
அவரது வீட்டைக் கொள்ளையடித்தனர் . பின் கிறிஸ்தவர்களுடைய வீடுகளுக்குள் புகுந்து , அவர்களை உதைத்து , அடித்து , சவுக்குளாளல் துண்டித்து , உடைமைகளைச் சூறையாடி , மிகவும் இழிவாக நடத்தித் துன்புறுத்தினார்கள் . ஏசுவடியானே கிரேஷியனிடம் இவை எல்லாவற்றையும் விவரித்தார் .
ஆதி காலத்து சபை ஊழியர்கள் பட்டியலில் இருந்து திரட்டியது.
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment