மிஷனரி இசபெல்லா தோபர்ன் பிறந்த தினம்*
1840-1901
ஒரு *இந்தியப் பெண்ணுக்குக் கற்பிப்பதைக் காட்டிலும் 50 அடி உயரமுள்ள சுவர் ஒன்றில் ஏறுவது மிகவும் சுலபம்.* ஆம் , ஆண்களுக்கான முதல் கல்லூரியை இந்தியாவில் ஆரம்பித்த அலெக்ஸாண்டர் டஃப் என்பவரின் கூற்றுப்படியே இந்தியாவின் நிலமை காணப்பட்டது.
18ம் நூற்றாண்டு அது ஜேம்ஸ் தோபர்ன் என்ற மெதடிஸ்ட் பிஷப் வட இந்தியாவுக்கு வந்தபோது எந்த பெண்ணுக்கும் எழுதப் படிக்க தெரியவில்லை , இந்துக்களின் மத்தியில் பெண்கல்வியைக் குறித்த ஆழ்ந்த தப்பான எண்ணங்கள் காணப்பட்டன . இந்நிலையை மாற்ற விரும்பிய அவர் தன் சகோதரியை இந்தியாவிற்கு அழைத்தார்.
அமெரிக்கா தேசத்தில் இறையியல் கல்வி கற்ற இசபெல்லா தோபர்ன் , தான் செய்ய வேண்டிய காரியம் பெரியதென எண்ணி இந்தியா வந்தார் . பெண்களுக்கென முதல் பள்ளிக்கூடத்தை லக்னோவில் தொடங்கினார் . அப்பள்ளி லால் பாக் என அழைக்கப்பட்டது . அநேக பெண்கள் அங்கு கல்வி பயில ஆரம்பித்தனர் . அங்கு படித்த பெண்கள் தொடர்ந்து படிக்க விரும்பியதால் அவர்களுக்காக ஒரு கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார் . 1887ஆம் ஆண்டு பெண்களின் சிவப்புக்கல் தோட்டம் என்ற பத் இசபெல்லாதோபர்ன் பெண்களின் கல்லூரியாக மாறியது.
இசபெல்லா தோபர்ன் மிகவும் சிறப்பான , ஊக்கமூட்டும் ஆசிரியராகவும் , மாணவர்களின் நண்பராகவும் காணப்பட்டார் . ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் பெண்களுக்காக ஜெபக் கூட்டங்கள் நடத்தி , அவர்களை கிறிஸ்துவின் பணி செய்ய பயிற்றுவித்தார்.
லக்னோவில் 31 ஆண்டுகள் அயராது உழைத்து கிறிஸ்துவின் நற்செய்தியை பகிர்ந்து மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த இசபெல்லா அம்மையார் நம்மையும் இப்பணி செய்ய அறைகூவல் விடுகின்றார்.
அருட்பணியாளர்களின் அரிய தகவல் களஞ்சியத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment