புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சத்திரப்பட்டி

ஜமீன்தார் வரும்பொழுது வாங்கா ஊதி வரவேற்க வேண்டுமாம் கொடுமையை சந்தித்த. சத்திரப்பபட்டி மக்கள்
செவல்பட்டிக்கு 10 கிலோமீட்டர் மேற்கே உள்ள ஊர் சத்திரப்பட்டி , கோயில்பட்டியிலிருந்து திருவேங்கடம் வழியாக இராஜபாளையம் போகும் வழித்தடத்தின் மத்தியில் உள்ளது . தற்போது சங்கரன் கோயில் சேகரத்தைச் சேர்ந்த சபையாகும்.
சத்திரப்பட்டி செவல்பட்டி ஜமீனுக்கு உட்பட்டது.
செவல் பட்டியை ' சத்திரம் ' என்றும் அழைப்பர் . அந்த ஜமீன்தாரின் நிலங்கள் இங்கிருந்தன , சத்திரத்தைச் சார்ந்த கிராமமாதலால் சத்திரப்பட்டி என்றாயிற்று.
ஆரம்பத்தில் நாரைக்குளம் சத்திரப்பட்டி என்றே அழைத்தணர் . இவ்வூரையடுத்துள்ள நாரைக்குளத்தில் பிரதானமாக நாரைகளும் , மற்றும் பறக்கும் பன்னீராயிரம் பறவைகளும் உண்டு என்று அவ்வூர் பெரியவர் சாமியார் சொன்னார் , சாமுவேல் என்ற அவர் பெயர் சாமியார் என்றாயிற்று.
சத்திரப்பட்டியில் இலுப்பை , மா , எலுமிச்சை ஆகிய தோப்புகளும் நிரம்ப இருந்தனவாம்.
தொடக்கத்தில் இவ்வூரில் 18 குடும்பத்தினர் மேற்குடி மக்கள் வசித்தனர் . அவர்களின் கொடிய தர்பார் கொடிகட்டிப் பறந்தது. *தாழ்குலப் பெண்கள் மார்பில் சேலை போட்டுக் கொண்டு போகக்கூடாது.* திடீர் திடீரென்று தீ வட்டிக் கொள்ளைகள் நடைபெறும். அறுவடைக்கு ஜமீன்தார் வரும்பொழுது தாழ்குல மக்கள் *வாங்கா ஊதி வரவேற்க வேண்டுமாம்.* அனைவரும் ஜமீன்தாரின் கொத்தடிமைகளே.
140 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மிஷனெரிகள் இவ்வூருக்குள் நுழைந்தனர். கொத்தடிமைத்தனத்தையும் கொடுமை களையும் எதிர்த்தனர். அமுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தனர் , கிறிஸ்தவர்களாயினர் . இரு தோள் கொடுத்து அக்கிரமங்களை எதிர்த்தார்கள். ஆபிரகாம் என்ற உபதேசியார் நியமிக்கப்பட்டார். இன்று அழகான கோயிலும் அநேக கிறிஸ்தவக் குடும்பங்களும் உண்டு
சரித்திர களஞ்சியங்களில் திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory