புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

உபத்திரவத்தை அனுபவித்த ஆதி திருநெல்வேலி திருச்சபை

குமரியில் விபூதி சம்பவம் போல அதிக உபத்திரவத்தை அனுபவித்த ஆதி திருநெல்வேலி திருச்சபை
உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என ஆண்டவர் சொன்னார் . ' ' உலகம் உங்களைப் பகைத்தால் அது உங்களைப் பகைக்கிறதற்குளே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும் நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும் நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும் உலகம் உங்களைப் பகைக்கிறது ' ' யோவான் 15 : 18 , 19
உபத்திரவத்திற்குத் திருநெல்வேலிக் கிறிஸ்தவர்களும் விலக்கல்ல . பகைவர்கள் கிறிஸ்தவச் சபைகளைத் துன்பப்படுத்தினார்கள் . ஆலயங்களையும் , பாடசாலைகளையும் , கிறிஸ்தவர்களின் வீடுகளையும் இடித்துப்போட்டார்கள் . எரித்தார்கள் . கிறிஸ்தவர்களைக் கட்டி வைத்து அடித்தார்கள் . பொய் வழக்குகள் போட்டுக் கிறிஸ்தவர்களைச் சிறையிலடைத்தனர்.
இதன் விளைவாக ஆயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்துவை மறுதலித்தார்கள்.
1841ஆம் ஆண்டு “ ஏரல் துன்பம் ' ' என்று சொல்லப்பட்ட உபத்திரவம் ஏரலில் தொடங்கியது . ' ' விபூதி சங்கம் ' என்ற அமைப்பு ஏரலில் தொடங்கப்பட்டது.
கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த உபத்திரவம் உண்டானது . கிறிஸ்தவர்கள் விபூதி பூசக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
இதனால் பண்ணைவிளை , நாசரேத் , நாலுமாவடி , சாத்தான்குளம் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மிகுந்த துன்பம் அடைந்தார்கள்.
நாசரேத்தைத் தாக்க வருபவர்களை எதிர்க்கக் கிறிஸ்தவர்களும் திட்டமிட்டுள்ளதை நாசரேத் மிஷனெரி கோரார் ஐயர் கலெக்டருக்கு அறிவித்தார்.
கலெக்டர் கிறிஸ்தவர்கள் தூக்கப்படாதபடிக் கலகத்தை அடக்கினார். அமைதி இப்பகுதிகளில் திரும்பியது .
1845 ஆம் ஆண்டு " நல்லூர் துன்பம் எனப்பட்ட துன்பம் உண்டானது.
நல்லூர்ப் பகுதியில் மிகக்கொடிய உபத்திரவம் உண்டானது.
இத்துன்பங்களினால் ஆயிரக்கணக்கானவர்கள் பின்வாங்கிப் போனார்கள். ஆனால் இந்த உபத்திரவங்களுக்குப்பின் மறுதலித்தவர்களில் அநேகர் திரும்பி வந்தார்கள்.
புற மதத்தைச் சேர்ந்தவர்களிலும் அநேகர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள் திருச்சபை வளர்ந்து பெருகியது.
உன்னதமான தேவனுடைய ஊழியர்கள் பதிவிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமா

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory