புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜோனத்தான் எட்வர்ட்ஸ்

ஜோனத்தான் எட்வர்ட்ஸ் (1703-1758)
மிஷனரி நினைவு தினம் (மார்ச் 22)
*உயிர்மீட்சி ஏற்பட வேண்டும்*
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு , திருச்சபைகளுக்குள் தேவையற்ற வீணான சடங்காச்சாரங்கள் மலிந்து , கிடந்தன . மக்கள் முட்டாளாக்கப்பட்டு குருட்டுத்தனமான நம்பிக்கைக்குள் தள்ளப்பட்டனர் . படைப்பின் தேவனை விட்டுவிட்டு படைக்கப்பட்ட பொருளை நாடிச் சென்றனர் . புதிய பொருட்கள் என்ற முறையில் பல புதுமைகள் புகுத்தப்பட்டன . மக்கள் பயமுறுத்தப்பட்டு , அவைகளில் நம்பிக்கை வைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர் . ஆனால் , ஆண்டவரின் அடியார்கள் அவ்வப்பொழுது தோன்றி திருச்சபையை சுத்தம் செய்கின்றனர் . சீர்கேடுகள் மறைந்து , சிறப்பான முறையில் திருச்சபை வளர்கின்றது .
அவ்விதமாக இங்கிலாந்தின் திருச்சபையை சீர்திருத்தியவர்களுள் ஜோனான் எட்வர்ட்சும் ஒருவர் . இவர் சிறந்த ஓர் இறையியலாளர் . எபிரேய கிரேக்கு லக்கன் மொழிகளிலும் புலமைபெற்றவர் . சிறந்த வேத போதனைகளின் மூலம் ஆண்டவரின் தெய்வீகத்தை முழுமையாக அறிந்து , தன் முழுமனதோடும் , ஆண்டவரைப் பின்பற்றியவர்.
ஒருநாளில் 13 மணிநேரம் படிப்பில் கவனம் செலுத்தும் இவர் , மற்ற நேரங்களில் ஜெபத்தில் தரித்திருந்தார் . சபையின் தன்மைகளைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்த இவர் , வெறுமனே திருச்சபைக்கு வந்து , முழங்காற்படியிட்டு ஜெபிப்பதும் , திருவிருந்தில் பங்கு கொள்வதும் , முக்கிய பண்டிகைகளில் மட்டும் திருச்சபைகளுக்கு வருவதும் வாடிக்கையாக மக்கள் கொண்டதை எண்ணி உள்ளம் வருந்தினார் . உள்ளத்தில் உயிர்மீட்சி இல்லாததை கண்டு , மக்களின் ஆன்மீக வாழ்வை முன்னேற்ற எண்ணினார்.
*பயங்கரமான தேவனின் கரங்களில் பாவி* என்ற தலைப்பில் இவர் ஆற்றிய பிரசங்கம் கேட்போரின் உள்ளத்தில் ஊடுருவி பாய்ந்தது . பலர் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டதோடு , கதறி அழுது பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் பெற்றனர் . ஒரே வருடத்தில் மட்டும் இவருடைய பிரசங்கத்தால் 3 , 000 பேர் இரட்சிக்கப்பட்டனர் . தன்னை ஒரு மிஷனெரியாக அர்ப்பணித்த இவர் , நியூ இங்கிலாந்து முழுவதிற்கும் சுவிசேஷத் தீயைப்பற்ற வைத்தார் . உயிர் மீட்சியின் பிரசங்கியாக உலா வந்தார் . மாபெரும் மாற்றத்தை இங்கிலாந்தில் ஏற்படுத்திய இவர் 1758ம் ஆண்டுவிண்ணகம் சென்றார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory