புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கிதியோன் இண்டர்நேஷனல் நிறுவனமும் ஒரு காவல் துறை அதிகாரியும்

கிதியோன் இண்டர்நேஷனல் நிறுவனமும் ஒரு காவல் துறை அதிகாரியும்*
கிதியோன்ஸ் இண்டர்நேஷனல் என்பது உலகம் முழுவதும் வேதாகமங்களை இலவசமாக விநியோகம் செய்யும் ஒரு சுவிசேஷ கிறிஸ்தவ அமைப்பு ஆகும்.
இந்நிறுவனம் அமெரிக்காவில் ஜனஸ்வில்லோ என்ற பட்டணத்தில் 1899 - ம் ஆண்டு ஜூலை மாதம் 1 - ந் தேதி சாமுவேல் ஈ .ஹில் , ஜான் ஹெச் .நிக்கல்சன் .வில்லியம் ஜே .நைட் ஸ் என பவர்களால் நிறுவப்பட்டது .கிதியோன்ஸ் 196 நாடுகளில் 93 மொழிகளில் வேதாகத்தை விநியோகம் செய்து வருகிறது.
ஒருமுறை இந்நிறுவனத்தின் ஒரு குழுவினர் பிரிக்கப்படாத சோவியத் ரஷ்யாவுக்கு வேதாகமத்தை விநியோகிக்கச் சென்றனர் .அவர்கள் எதிர் பார்த்ததைவிட பல இடங்களில் வேதாகமத்தை விநியோகிக்கும் வாய்ப்பு கிடைத்தது .ஆனாலும் அரசு சொல்லும் இடங்களில் மட்டும் வேதாகமம் விநியோகிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் .அதை எற்றுக் கொள் அக்குழுவினர் அனுமதிக்கப்பட்ட நகரங்களில்
பள்ளிகளில் வேதாகமங்களை விநியோகிக்க வாகனத்தில் சென்றனர் .இக்குழுவினருடன் காவல் துறை அதிகாரி ஒருவரும் வேதாகம் விநியோகத்தை மேற்பார்வையிட சென்றார் விநியோகிக்க வேண்டிய ஒரு நகரிலுள்ள பள்ளியருகே வந்தபோது , அங்கு நிறுத்தாமல் கடந்து சென்று வேறு ஓர் இடத்திற்குப் போகும் படி காவல்துறை அதிகாரி அக்குழுவினரிடம் கூறினார் .தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கிதியோன் குழுவினர் கடந்து சென்றார் .சுமார் 7 கி .மீ .தொலைவுக்கு அப்பால் அனுமதிக்கப்படாத வேறு ஒரு பள்ளியின் முன்பாக நிறுத்தி வேதாகமத்தை விநியோகிக்கச் சொன்னார் .இந்தக் காவல் துறை அதிகாரி நம்மை ஏதோ பிரச்சினையில் சிக்க வைக்கப் போகிறார் என்று எண்ணி குழுவினர் பயந்தனர் .ஆனால் எந்த பிரச்சினையுமின்றி வேதாகமங்காள விநியோகித்து முடித்தனர் .அதன் பின் முன்பு அனுமதிக்கபட்ட நகரிலுள்ள பள்ளிக்குச் சென்றனர். கிதியோன் குழுவின் தலைவர் காவல் துறை அதிகாரியிடம் தயக்கத்தோடு ஏன் அனுமதிக்கப்படாத. ஒரு பள்ளியில் வேதாகமம் விநியோகிக்கச் சொன்னீர்கள் " என்று கேட்டார் . அதற்கு அவர் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் இந்தப் பள்ளியில் படிக்கின்றனர் . அவர்கள் இருவரும் வேதாகமத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமோ , கிடைக்காதே என்று எண்ணி இங்கு அழைத்து வந்தேன் " என்று கூறினார் .தான் அறியாவிட்டாலும் தனது பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் என நினைத்து மிகவும் ஆச்சரியப்பட்டார் குழுவின் தலைவர்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory