உங்களோடு இருக்கும் தேவன்*
மிஷனரி அடா லீ பிறந்த தினம்(23/03/1856)
(1856-1948)
(1856-1948)
அடைமழை , இடி , புயல் காற்று , தொடர்ந்தது நிலச்சரிவு , ஐயோ ஒரே குடும்பத்தில் ஆறு குழந்தைகள் நிலச்சரிவினால் மண்ணை அடியில் புதையுண்டு போயினர் , அடா லீ செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவள் . மிஷனெரியாக அமெரிக்காவை விட்டு இந்தியாவிற்கு வந்தார் . தன் கணவர் டேவிட் லீயுடன் வங்காளத்தில் பணியாற்றினார் . லீ குடும்பத்தின் ஆறு குழந்தைகளும் டார்ஜிலிங்கில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டதை அக் கொடுரத் துயரச் சம்பவம் . அடா லீ தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தார் .
வாழ்க்கையின் சோகம் அவருக்கு ஒரு வேகத்தைக் கொடுத்தது கிறிஸ்துவிற்காகத் தான் செய்ய வேண்டிய பாகத்தை உணர்த்தியது வங்காளத்தின் ஆதரவற்றக் குழந்தைகள் மீது கனிவான தாகம் ஏற்பட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் தாயாக மாறினாள் .
1943 - 44ம் ஆண்டுகளில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது பசியினால் வாடிய 522 குழந்தைகளை அரவணைத்து ஆதரித்தார் . அத்தனை குழந்தைகளுக்கும் உயர்வான கல்வியை அளித்தார் . வங்காள நோய் தடுப்பு இயக்கத்தில் , அதிகபொறுப்பு ஏற்று தீவிரமாக செயல்பட்டதால் அடா லீக்கு அரசாங்கமே தங்கப்பதக்கம்பரிசளித்து அவரை கெளரவித்தது .
தன்னை அழைத்த தேவனுக்கு உண்மையுடன் உழைக்கும் அடா லீ இவர் விடுதியில் படித்த ஒருவர் பேராயராக மாறினார் . பலர் தலைமை ஆசிரியர்களாகவும் மற்றும் பலர் உயர் பொறுப்புகளையும் பெற்றனர் . வங்காளத்தில் எழுப்புதல் ஏற்பட அடா லீ காலமானாள் . *லீ ஞாபகார்த்த மிஷன்* இன்றும் வங்காளத்தில் மிக சிறப்பாக செயல்படுகின்றது.
வங்காளத்தில் அவள் ஆரம்பித்த பயணம் இன்றும் தொடர்கின்றது.
No comments:
Post a Comment