புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

முதலூர்

நெல்லை திருமண்டிலத்தில் முதன் முதலில் தோன்றிய கிறிஸ்தவக் கிராமம்*
முதலூர் நெல்லை நாட்டில் புதிதாகக் கிறிஸ்தவம் தழுவிய மக்கள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தார்கள் . அவர்களுக்கு அதிகமான இடுக்கண்களும் - இன்னல்களும் எழுந்தன . அத்தகையோர் 28 பேரை ஒன்று கூட்டி முதன் முதலாக முழுக் கிறிஸ்தவக் கிராமமாக உருவான முதல் ஊர்தான் ( 1799 ) முதலூர் ஆகும் . 1803 ஆம் ஆண்டில் மகத்தான மிகாவேலின் ஆலயம் கட்டப்பட்டது ,
முதலூரை நிறுவியவர் சின்னமுத்து என்ற சிவனடியார் இவர் சுவாட்ஸ் ஐயர் மூலம் சிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்து தாவீது சுந்தரானந்தம் என்ற பெயரில் திருமுழுக்குப் பெற்று சபை விருத்திக்கு தீவிரமாக உழைத்தார் . எதிரிகளால் தாக்குண்டு பசகுதான் இரத்தச் சாட்சியாக மரித்தார் . நெல்லையின் முதல் இரத்தச் சாட்சி இவரே . அவர் கட்டி வளர்த்த சபையே முதலூர் .
நார்மன் என்ற மிஷனெரியின் உழைப்பால் ( 1882 ) முதலூர் கல்வி கேள்விகளில் முதல் தரக் கிராமமாக விளங்கியது . குளோரிந்தா , கால்டுவெல் போன்ற பக்திமான்களின் காலடிபட்ட புண்ணிய பூமி .
ஐயர் 1883 ஆம் ஆண்டில் சுமார் ஈராயிரம் பேர் அமர்ந்து ஆராதிக்கக்கூடிய அழகு ஆலயம் அமைக்கப்பட்டது . 216 அடி தூத்துக்குடி அறமாவட்ட உயரத்தில் மகத்தான கோபுரத்தையும் கொண்டது .
பெயரின் *நெல்லை மறைமண்டிலத்தில் முதன் முதலில் தோன்றிய கிறிஸ்தவக் குடியிருப்பு* முதலூர்.
*பழைய நூல்களில் இருந்து திரட்டியது*
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory