புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஊசிக் கோபுர பாளை மாநகர்

*ஊசிக்கோபுர பெயர் வரலாறு*
*ஊசிக் கோபுர பாளை மாநகர்*
சங்கப் புலவர்கள் சங்கமித்திருந்த மங்கலப் பாண்டி வளநாட்டில் சந்தனப் பொதியச் செந்தமிழ்ச் சோலையாம் நெல்லை யம்பதியில் - பாரெலாம் புகழும் பட்டணம் பாளையங்கோட் . கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தலைமைத்தலம்.
இதன் பழம்பெரும் பெயர் பாளையம் , பட்டாளம் அல்லது படை என்று பொருள் , கோட்டை கட்டிப்படை வைத்துப் பாதுகாத்த நகர் பாளையங்கோட்டை . ( கி . பி . 1776 ) இன்றும் இடிந்து பட்ட அதன் பழங்கோட்டைகளைக் காணலாம் . " தெற்கு பஜாரை கோட்டை கடை பஜார் ' என்று மக்கள் சொல்வது இப்பொழுதும் வழக்கில் உள்ளது .
இ . பி . தாமஸ் என்பவர் மாவட்ட ஆளுநராக இருந்த காலத்தில் ( 1840 ) பாளையம்பதியின் கோட்டைச் சுவர் கற்களை பொதுமக்கள் உபயோகித்துக் கொள்ள உத்தரவிட்டார் . நெல்லைத் திருமண்டில அச்சுக்கூடத்தில் கூட அக்கற்களை இன்றும் காணலாம் .
மேலை நாட்டு கத்தோலிக்க குருமாரும் - சீர்திருத்த திருச்சபை அருளாளர்களும் சேர்ந்து இந்நகரைக் கல்விக் களஞ்சியமாக்கினர் . சீர்திருத்தத் திருச்சபையினர் . 1870 ஆம் ஆண்டிலேயே தூய யோவான் உயர்நிலைப்பள்ளியை உருவாக்கி 1878 ல் அதைக் கல்லூரியாக்கினர் .
நூறு ஆண்டுகளுக்கு முன்பே கல்லூரி கண்ட நன்ன்நகர் பாளைநகர் . அதன் அழகுக்கு மேலும் மேலும் அழகூட்டுவது மேற்கே நிமிர்ந்து நிற்கும் ஊசிக்கோபுரமாகும்.
பாளை - நெல்லை பெருவழிப் பாதையில் அமைந்த இவ்வழகு ஆலயம் 1826 ஜனவரி மூன்றாம் நாள் கால்கோள் நாட்டப்பட்டது . இவ்வாலயத்தைக் கட்டிய ரேனியஸ் -ஜயர் அதற்குப் பெயர் வைக்கவில்லை . 1835 ஆம் ஆண்டில் அவர் விலகிக் கொண்ட போது , சென்னை முதல் பேராயர் காரி என்பார் நெல்லை 1836 ல் முதன் முறையாக நெல்லை வந்தார் . அப்பொழுது , தேவசகாயம் ஐயருக்கு முழுப்பட்ட ஆராதனை நடந்து முடிந்தது . குறிப்பு நோட்டில் கையெழுத்திடும் பொழுது ஆலயத்தின் பெயர் என்ன என்று கேட்டார் . ரேனியஸ் ஐயருக்குப் பின் பொறுப்பேற்றிருந்த பெற்றிப் ஐயர் ஆலயத்திற்குப் பெயர் இன்றும் இல்லை என்றார் . உடனே பேராயர் காரி ' *பரிசுத்த திரித்துவ ஆலயம்* என்று பேரிட்டார் . நூறு ஆண்டுகளுக்குப் பின்பு 1940 ஆம் ஆண்டில் பேராயர் ஸ்தேவான் நீல் என்ற பேரறிஞர் காலத்தில் *அத்தியட்சர் ஆலயம்* என்ற பெயர் பெற்றது.
பரி . திரித்துவ அத்தியட்சாலயம் என்று சபை மக்களாலும் , ஊசிக்கோபுரம் என்று ஊரிலுள்ள அனைத்து மக்களாலும் இன்றும் அருமையாக அழைக்கப்பட்டு வருகிறது . 1967 ஆம் ஆண்டில் இவ்வழகு ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது . 1998 ஆம் ஆண்டு மாபெரும் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது . ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய ஆலயங்களுள் ஒன்றாக மிளிர்கிறது.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory