புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சிப்பிப்பாறை திருச்சபை வரலாறு

சிப்பிப்பாறை திருச்சபை வரலாறு: -
(மதுரை ராமநாதபுரம் திருமண்டலம், சிவகாசி அருகே ஏழாயிரம் பண்ணை சேகரம், சிப்பிப்பாறை)
1860 ஆம் ஆண்டு Rev . W . கிரே எழுதிய அரையாண்டு அறிக்கையின்படி , ' ' நான் சிப்பிப்பாறைக்குச் சென்றிருந்தேன் . அங்கு அழகான ஆலயம் இருந்தது.
இந்த ஆலயம் *சுரண்டையிலிருந்து* ஊழியம் செய்த வந்த பேரன்ப்ரூக் அவர்களால் கட்டப்பட்டது.
இந்த ஆலயம் உபதேசியார் தங்கியிருக்கிறார் .
இவர் இந்த ஊரைச் சுற்றியுள்ள *கிராமங்களில் சுற்றித்திரிந்து நற்செய்திப் பணி* செய்தும் , மற்றும் இந்த கிராமங்களைச் சுற்றி இருக்கிற கிராமங்களில் வசிக்கிற ஒரு கிறிஸ்தவர்களைச் சந்தித்து , அவர்களை கிறிஸ்தவ வாழ்க்கையில் மென்மேலும் வளரவும் உதவி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு கிறிஸ்து தன்னுடைய சரீரமாகிய இந்த சிப்பிப்பாறை திருச்சபை மீது கிருபை கொண்டார்.
இதன் விளைவாக 1866 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி திரு . ஞானமுத்து என்பவரும் அவரோடு 8 வாலிபர்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இவர்கள் அனைவரும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஞானமுத்து என்பவர் மிகுந்த திடப்பற்றுள்ளவர் . சிறந்த அறிவாளி , கடுமையாக உழைத்தவர் , இவருடைய கடின முயற்சியால் Rev . *பேரன்ப்ரூக்* அவர்களால் கட்டப்பட்ட பழைய ஆலயம் இடிக்கப்பட்ட அதே இடத்தில் ஒரு புதிய ஆலயத்தை தன்னுடைய சொந்த செலவில் தன்னோடு கூட ஞானஸ்நானம் பெற்ற மற்ற எட்டு நபர்களின் உதவியுடன் கட்டினார்.
கட்டப்பட்ட இந்த புதிய ஆலயத்தில் தானும் தன்னோடு கூட இருந்து ஆலயத்தைக் கட்ட முயற்சி செய்த 8 நபர்களுடன் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.
இருப்பினும் இவரோடு ஞானஸ்நானம் பெற்ற 8 நபர்களும் சில மாதங்களுக்குள் கிறிஸ்தவ சமயத்திலிருந்து பின்வாங்கிப் போனார்கள்.
எனினும் ஞானமுத்து என்பவர் மிக உறுதியாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்து வந்தார்.
இவர் வியாபாரம் செய்து வந்தார் .
இவருடைய வியாபாரத்தை இயேசு மென்மேலும் ஆசிர்வதித்தார் .
எனவே தான் கட்டிய ஆலயத்திற்கு அழகான மணி , மேஜை , மற்றும் தேவையான நாற்காலிகளை வாங்கிப் போட்டார் . ' இந்த ஆலயம் இயேசுவை அறியாத மக்கள் கண்கள் முன்பாக மிக அழகாக , சுத்தமாக இருந்தது .
ஆனால் இன்றைய நாளில் இந்த ஆலயத்தில் ஆராதனை நடைபெறுவது தடைப்பட்டு , பள்ளிக்கட்டிடத்தில் ஆராதனை நடைபெற்று வருகிறது !
ஞானமுத்து என்பவருடைய அனுதின வாழ்க்கையில் கிறிஸ்துவின் குணாதிசயங்கள் - வெளிப்பட்டது.
இவர் இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களோடு அதிகமாக ஒன்றித்து வாழ்ந்து வந்தார்.
இருப்பினும் இவருடைய மனைவி மற்றும் இவரது உறவினர்கள் இன்னும் கிறிஸ்தவர்களாக மாறவில்லை.
ஞானமுத்துவின் நோக்கமெல்லாம் ஒரு உண்மையான கிறிஸ்தவராக பேச்சிலும் செயலிலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே . Rev . வேதநாயகம் சிப்பிப்பாறைக்கு சென்றிருந்த பொழுது திரு . ஞானமுத்து கல்லினால் கட்டப்பட்ட ஒரு பெரிய வீட்டைக் கட்டியிருந்தார். அது ஓரளவு முற்றுப்பெறாமல் இருந்தது . இருப்பினும் Rev . வேதநாயகம் சிப்பிப்பாறைக்கு வந்திருந்தபொழுது தன்னுடைய வீட்டை இயேசு கிறிஸ்துவுக்கென அர்ப்பணித்து ஒரு ஜெபக்கூட்டம் நடத்தப்படவேண்டுமென விரும்பினார்.
இதற்கு குருவானவரும் ஒத்துக்கொள்ள , ஜெபக்கூட்டம் நடைபெற்றது . இந்த ஜெபக் கூட்டத்திற்கு இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவருடைய நண்பர்களும் , உறவினர்களும் அதிகமாக வந்திருந்தார்கள்!
ஜெபம் எல்லாம் முடிந்தவுடன் , தன்னுடைய நண்பர்கள் , உறவினர்கள் பக்கமாகத் திரும்பி , ' ' இன்றைக்கு நம் மத்தியில் என்னுடைய குருவானவர் சொன்ன எல்லா கருத்துக்களையும் நான் நம்புகிறேன்.
இந்த வீட்டைக்காட்டிலும் மிகவும் விலையேறப்பெற்ற ஒரு நல்ல வீட்டை இயேசு கிறிஸ்து எனக்கு பரலோகத்தில் தந்தருள்வார் என நம்புகிறேன் ' ' என்றார்.
ஆனால் இப்படி வளர்ந்து வந்த திருச்சபையில் இன்றைக்கு 8 கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது!
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
The Madras Church Missionary Record , 1862 Vol XXIX P 150

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory