ஜெப வீரனான போர்ட்லாந்தின்
*Edward Payson..*
*Edward Payson..*
தேவனோடு இடைவிடாத தொடர்பும் வலுமையான ஐக்கியமும் கொண்டிருந்த இந்த மனிதன், சபையின் முன் வெளிப்படுத்திய வல்லமையை யார் அளவிட முடியும் ?
*ஆவிக்குரிய ஜாம்பவான்களும், ஜெபத்தில் இராட்சதரும், உன்னதங்களிலே கழுகு போல உயரப் பறக்கும் இவர்களுக்கெல்லாம் முன்னால், ஜெபத்தில் நாம் எல்லோரும் 'கீழிருக்கும் கிளைகளிலேயே சிறகடித்து வட்டமிட்டு வரும் சிட்டுக்குருவிகள்' தான் !*
*இந்தப் Payson ஐ ஜெபத்தில் ஜெயித்தவர் யாருமில்லை என்பேன் !*
இந்த மகா மனிதரான Payson ன் சபைக்கு Lafayette என்ற பேர் பெற்ற மனிதர் ஒருவர் பிரசங்கிக்க வருகிறார் என்று கேள்விப்பட்ட ஒரு பெண், தன் அடக்க முடியாத ஆவலால், பிரசங்க மேடைக்குச் சென்று அவரைத் தேடினார்..
அங்கு அவரைக் காண முடியாமல் போன அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல் ! அது வேறு எதுவுமில்லை.. பிரசங்க மேடையில் தன் இருதயத்தை ஊற்றி ஜெபித்துக் கொண்டிருந்த Payson ன் குரல் தான்..
அந்த ஜெபம் கேட்டு ஸ்தம்பித்து நின்று விட்ட அந்தப் பெண், ஜெபித்து முடித்த பேஸனிடம் கேட்டார்.." உங்கள் ஜெபத்தின் நகல் ஒன்று எனக்குக் கிடைக்குமா ?" என்று..
*பேஸன் சொன்னார்..*
*"அது எழுதி வைத்து வாசிக்கப்பட்ட ஜெபம் அல்ல..ஜெபிக்க ஜெபிக்க அது காற்றோடு கலந்து பரலோகத்துக்குப் போய் சேர்ந்து விட்டது.."*
*"அது எழுதி வைத்து வாசிக்கப்பட்ட ஜெபம் அல்ல..ஜெபிக்க ஜெபிக்க அது காற்றோடு கலந்து பரலோகத்துக்குப் போய் சேர்ந்து விட்டது.."*
இது வரை தான் எங்குமே கேட்டிராத ஜெபம் ஒன்றையும், மன்றாட்டின் பெருமூச்சுகளையும், விண்ணப்பங்களில் துல்லியத்தையும் கண்ட அந்தப் பெண் மெய்மறந்து நின்றாள்.
பிரசங்க பீடமோ, ஜெபக்கூட்டமோ, வியாதிப்படுக்கையோ, திருமண ஆராதனையோ - எங்கெல்லாம் Payson ஜெபித்தாரோ, அவரது ஜெபங்கள், விண்ணப்பங்களிலிருந்த ஆவியும் அபிஷேகமும், அனலும் அங்கலாய்ப்பும் தனித்தன்மையும் நிகரற்றவையுமாய் இருந்தன. அவர் ஜெபிக்க ஜெபிக்க அவரை நிரப்பிக் கொண்டே இருந்த பரலோக அபிஷேகம் அவரை ஒரு வற்றாத ஊற்றாக்கி வைத்திருந்தது..
அவரது ஜெபங்களில் காணப்பட்ட ஒரு அசாதாரண வல்லமை - அந்த ஜெபத்தைக் கேட்கிற ஆத்துமாவின் கவனத்தைக் கர்த்தர் பக்கம் திருப்பி, அது, தன்னைக் கறைப்படுத்தும் உலகிலிருந்து தன்னை விடாப்பிடியாய்ப் பிரித்துக் கொள்ளுமட்டும் இறுகப்பிடித்தது.
தனிமையின் ஜெபத்தில் வெளிவந்த அவரது ஆழ்ந்த பயபக்தியான ஏங்கலும் கெஞ்சலுமான அவரது குரல், பொது இடத்தில் காணப்பட்ட வெளிப்படையான பலன்களில் எதிரொலியாய் தொனித்தது..
அவரது மிக நீண்ட அந்தரங்க ஜெபங்களின் தாக்கம், அவர் மூலமாய் அநேகரைப் பற்றிப் பிடித்து, அவர்களையும் ஜெப வீரர்களாய் மாற்றியது.
அவரது ஜெப அறைக்குள், ஜெபித்துக் கொண்டிருக்கும் Payson ஐ சற்று எட்டிப் பார்த்துக்கொள்ள விரும்பின சிலர், மகா பரிசுத்த ஸ்தலம் போன்ற பயபக்தியான அந்த இடத்தைக் கண்டு, "தாங்கள் நிற்கிற இடம் பரிசுத்த பூமி" என்ற நடுக்கத்தோடு தங்கள் காலணிகளைப் போடத் துணியாமல் கழற்றிப் போட்டனர்..
"தேவனால் அழைக்கப்பட்டாலொழிய இந்தக் கனமான ஊழியத்துக்குத் தன்னை ஒருவனும் தானாய் ஏற்படுத்திக் கொள்வதில்லை" என்ற வார்த்தை இந்த மன்றாட்டு ஊழியத்துக்கும் தப்பாமல் பொருந்தும்.
நம்மை அசுத்தத்துக்கு அல்ல, பரிசுத்தத்துக்கே அழைத்த தேவன், நம்மைத் தமக்கு முன் விழுந்து மன்றாடும் மன்றாட்டு வீரர்களாகவும் அழைக்கிறார் என்றே நான் நம்புகிறேன்..
"பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்" கிறிஸ்துவும் நமக்காக மிக ஊக்கமாக மன்றாடினாரே ! கிறிஸ்துவின் இந்த வேதனையும் ஜெபமும் கண்ணீரும் பேஸனுக்கு கிறிஸ்துவால் நன்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது..
Payson ன் டைரியின் பக்கங்களை சற்று புரட்டிப் பாருங்கள் ! அவரது மன்றாட்டின் ஆவியும், ஏக்கப் பெருமூச்சுகளும், ஆவிக்குரிய போராட்டங்களும், கிறிஸ்துவின் சிங்காசனத்துக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடந்த விதமும் அங்கே தெளிவாய்க் காணப்படுகின்றன..
*Payson ஐ பற்றி அவரது நண்பர் ஒருவர் எழுதுகிறார்..*
*"Payson ன் எல்லா குணநலன்களைப் பார்க்கிலும் மிக அழகாய் மேலோங்கி நின்றது ஒன்று உண்டானால் அது அவரது தாழ்மையே !"*
*"ஜெபத்தில் அவரது ஆத்துமா தன்னை மண்ணோடு மண்ணாய்த் தாழ்த்தி நின்றது.. நான் கேட்ட எல்லா மனிதரிலும் இதிலே தான் அவர் உயர்ந்து நிற்கிறார்.."*
*"எங்கள் எல்லாரையும் உயர உயர மேலே எடுத்துச் சென்று தேவ பிரசன்னத்தில் கொண்டு போய் நிறுத்திவிடுவார் பேஸன்.. தேவனை நோக்கி அவர் தன் கைகளை விரிக்கும் போது பரலோகமே பூமிக்கு இறங்கி வந்து தேவ மகிமை எங்கள் கூடாரத்தை மூடிக்கொண்டது போலிருக்கும்..." என்று தொடர்கிறார் அவரது நண்பர்.*
இந்தப் பரிசுத்த மனிதன் தேவனோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவர் மேல் நிழலிட்ட மகிமையைக் கண்டு, இதுவே இப்படியிருக்குமானால், மறுரூப மலையில் இயேசுவின் மகிமையின் காட்சியைக் கண்ட பேதுரு எப்படி மெய்மறந்து நின்றிருப்பான் என்று சில வேளைகளில் நான் நினைத்ததுண்டு.."
Payson ன் வாழ்க்கையின் இப்பகுதியைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதின் காரணம், இந்த மன்றாட்டு ஜெபத்தின் கலையில் அவர் கைதேர்ந்த மாவீரராய் காணப்பட்டதே !
*இந்த தேவன் நம்முடைய தேவன் - இந்த விசுவாச மா மகா வீரர்களான ஜாண் ஹைடு, சார்ல்ஸ் ஃபின்னி மற்றும் எட்வர்ட் Payson ன் ஜெபங்களைக் கேட்ட தேவன், நம்முடைய தேவன் - கர்மேல் மலையின் கொடுமுடியில் தனியனாய் நின்ற எலியாவின் ஜெபத்தைக் கேட்ட அதே தேவன், நாமும் அதே ஆவியில் ஜெபிக்கும் போதெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்..( 'ஆவியில்' என்ற வார்த்தை மிக முக்கியம்)*
*மா மகா வீரர்கள் அன்றும் இருந்தனர்..*
*இன்றும் அப்படிப்பட்ட மாவீரர்கள் இருக்கவே செய்கின்றனர்..*
*இன்றும் அப்படிப்பட்ட மாவீரர்கள் இருக்கவே செய்கின்றனர்..*
*ஜெபத்தில் அசாதாரண மாவீரர்களாய் அவர்கள் நின்றதாலேயே அவர்கள் ஜெபமும் அசாதாரண பதில்களைக் கொண்டு வந்தன !
அடைபட்ட அக்கினி
Pr.Romilton
Pr.Romilton
No comments:
Post a Comment