புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தெற்கு புளியங்குளம் சபை வரலாறு

*தெற்கு புளியங்குளம் சபை வரலாறு*
கிறிஸ்தவர்கள் இல்லாத கிராமத்தில் 1942ல் நல்லமரத்தைச் சார்ந்த திரு . P தானியேல் மாணிக்கம் , திருமதி . தா , பிளாரன்ஸ் ராஜம்மாள் குடும்பம் கல்விப் பணிசெய்ய முதல் கிறிஸ்தவ குடும்பமாய் குடியேறியது .
2வது குடும்பமாய் திரு . வெள்ளத்துரை திருமதி . தங்கரத்தினம் தொடர்ந்து 6 குடும்பங்கள் ஆக உயர்ந்தது .
சொந்த கிராமத்தில் ஆண்டவரை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரு . P . தானியேல் மாணிக்கம் அவர்களுக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் ஓலை கொட்டகை ஆலயம் அமைத்து பிரட்ரிக் ரத்தினராஜ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது . 27 . 01 . 1989 திருமதி . தா . பிளாரன்ஸ் ராஜம்மாள் ஆலயம் கட்ட 2 சென்ட் நிலம் திருமண்டலம் பெயருக்கு எழுதி கொடுத்தார் .
பேராயர் . ஜேசன் S . தர்மராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது .
எதிர்பாளர்களால் அடிக்கல் பிடுங்கிப் போடப்பட்டது . கிறிஸ்தவர்கள் ஊர் வரியாக அரை வரி கொடுத்து வந்தனர் .
அதன்பின்னர் 25 . 01 . 1990ல் திருமதி . முத்தம்மாள் திரவியம் 3 சென்ட் நிலத்தை திருமண்டல பெயருக்கு எழுதி கொடுத்தார் .
அதில் புதிய ஓட்டுக்கூரை ஆலயம் கட்டப்பட்டு 29 . 10 . 1990ல் பேராயர் ஜேசன் S . தர்மராஜ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது . பின்பு ஆலயத்திற்கு வடபுறம் விலைக்கும் பின்புறம் நன்கொடையாகவும் பெறப்பட்டு 7 . 6 . 15 அன்று அடிக்கல் நாட்டி , புதிய கான்கிரீட் ஆலயம் கட்டப்பட்டு 23 . 05 . 2018 அன்று *பேராயர் JAD ஜெபசந்திரன்* அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
மொத்தம் 20 குடும்பங்கள் இச்சபையில் உள்ளனர்.
*டோனாவூர் சிறப்பு மலர்*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory