புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அன்னை மரி பாலா என்னை ஆதரிப்பாய் நீயே

சுவிசேஷபுரம் 123 ஆவது சேர்ப்பின் பண்டிகையில் 80 ஆண்டுகளாக காணிக்கைப் படைப்பில் தொடக்கப்பாடலாக பாடப்படும் "அன்னை மரி பாலா என்னை ஆதரிப்பாய் நீயே"பாடல்*
நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களின் நற்செய்தி அறிவிப்பால் திசையன்விளைக்கும் இட்டமொழிக்கும் இடையே உள்ள கிருஷ்ணாபுரத்தில் சிலர் 1835 ல் கிறிஸ்தவரானார்கள் அவர்களுக்கு அக்கிராமத்தினரால் துன்பங்கள் ஏற்பட்டது.
ரேனியஸ் ஐயரவர்களின் வலதுகரமாகச் செயல்பட்ட தாவீது உபதேசியார் கிருஷ்ணாபுரத்தையொட்டி தமக்கு இருந்த பெரியநிலத்தை CMS மிஷனுக்கு விற்க முன்வந்தார் அதை வாங்கிய ரேனியஸ் துன்புற்ற கிறிஸ்தவர்களை அங்கு குடியேற்றி அதற்கு *சுவிசேஷபுரம்*
எனப்பெயரிட்டார். CMS சர்க்கிள் தலைமையிடங்களில் சேர்ப்பின் பண்டிகை தொடங்கப்பட்டபோது தென்திருநெல்வேலி CMS சர்க்கிள் தலைமையிடமான சுவிசேஷபுரத்திலும் தொடங்கப்பட்டது
இன்று 123 ஆவது ஸ்தோத்திரப்பண்டிகை கொண்டாடப்பட்டது.
1939 ல் *சுவிசேஷபுரம் சபைஊழியர் ஆக கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த எனது தாத்தா திரு.J.தேவாசீர்வாதம் உபதேசியார் பொறுப்பேற்றார்கள். அவர்களால் 1940 மே மாத ஸ்தோத்திரப்பண்டிகைக்காக அன்னை மரி பாலா என்னை ஆதரிப்பாய் நீயேபாடல்*
இயற்றப்பட்டு மெட்டு அமைத்து வயலின் இசைத்தவாறு சுவிசேஷபுரம் சபை வாலிபர்களுக்கும் அது கற்றுக்கொடுக்கப்பட்டது. 1940 மே சேர்ப்பின்பண்டிகையில் பாடப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக காணிக்கைப் படைப்பின் தொடக்கப்பாடலாக சுவிசேஷபுரம் சபையாரால் உற்சாகமாகப் பாடப்பட்டு வருகிறது.
இன்றும் பாடப்பட்டது.
(ஜா.ஜான்ஞானராஜ்)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory