*நாசரேத்திலிருந்து நன்மை வருமா ?*
என்ற மாபெரும் வினாவிற்கு , *வந்தது , வருகிறது மேலும் வரும் , ஏராளம் வரும்* என மாபெரும் சவால் விடுவது தான் நானிலம் புகழ் மணக்க நாசரேத்திற்கு வந்த மாபெரும் *மிஷனெரி மர்காஷிஸ் ஐயர்* அவர்களின் அடிச்சுவடுகள் , தரித்திரருக்கு சுவிசேஷம் அறிவியுங்கள் என்ற ஏழைகளின் அன்பர் , தன்னுயிரை தரணிக்கு ஈந்த தல சிறந்த நண்பர் , *நேற்றும் இன்றும் என்றும்* மாருத நேசர் இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளை அப்படியே பின்பற்றியவர் தான் கனம் மர்காஷிஸ் ஐயர்.
பல்வேறு நிலையில் பரிதாபத்துக் குரிய வர்களாக வாடப்பட்ட பச்சிளங்குழந்தைகளை தாய் முகம் காணா சேய்களை தன் பங்களாவிலே கூட்டி கண்ணெண போற்றி கருத்தாய் காத்து சீராய் வளர்த்து கல்வி புகட்டி அவர்களோடு அவர்களாக எவ்வாறு வாழ்ந்தார்
*என்பதை எப்படி மறக்க முடியும்.*
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment