(பிஷப் கால்டுவல் பங்களாவிற்க்கு ஒருவன் ஓடி வருகிறான்)
*வந்தவன்*: " ஐயா துரை அவர்களே எங்களை மன்னித்து விடுங்கள் ' ' ( அவர் கால்களில் விழுகிறான் )
*கால்டுவல்* : ' ' என்னப்பா நடந்தது ! எழுந்திரு ! ' ' வந்தவன் : நீங்க தெய்வம் ஐயா ! உங்களுக்கு துரோகம் செய்தவங்க வாழவே முடியாது ஐயா !
*கால்டுவல்*: " என்னப்பா , விபரமாகச் சொல் !
*வந்தவன்*: கொஞ்ச நாளைக்கு முன்னே எங்க ஊர்ல வந்து நீங்க பிரசங்கம் பண்ணும் போது , உங்களை நாங்கள் மண்டை உடைய கல் எறிஞ்சோம் ! ஆனால் அதுக்கு நாங்க அனுபவிக்கிறோம் ஐயா ! அனுபவிக்கிறோம் !
*கால்டுவல்*: என்னப்பா ! நடந்தது என்ன ?
*வந்தவன்*: எங்க ஊரே குலுங்கிப் போச்சு . காலரா வந்து ஊரையே அழிச்சிடும் போல தெரியுது . *உங்களைக் கல்லால் எறிஞ்சவங்க மரணப்படுக்கையில் இருக் காங்க !* நீங்க வாங்க ஐயா , எங்க ஊருக்கு ! *உங்கள் காலடி பட்டாத்தான்* எங்கள் ஊர் பிழைக்கும் ! அந்த கிறிஸ்துவைப் பற்றி சொல்லுங்க ! நிச்சயம் உங்களை யாருமே கல்லெறியமாட்டாங்க !
( கால்டுவல் புறப்படுகிறார் )
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
No comments:
Post a Comment