மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்ஸ்
1999ம் வருடம் ஜனவரி 23 . இதயங்கள் உடைந்த நாள்.
கிறிஸ்துவின் அருட்பணியாளர்களுக்கு சவாலைத் தந்தநாள்.
கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற தொழு நோயாளிகளின் நண்பனும் , அவரது இரு சின்னஞ்சிறிய தூதர்களைப் போன்ற குழந்தைகளும் தீயில் உயிருடன் கருகிய நாள் .
இந்திய நாட்டில் ஒரிசா என்ற மாநிலம் . தொழுநோயாளிகளுக்கென அமைக்கப்பட்ட அந்த மையத்திற்கு 1965ஆம் ஆண்டு கிரஹாம் ஸ்டெயின்ஸ் அடி எடுத்து வைத்தார்.
கடவுளின் அன்பை தொழுநோயாளிகளுக்கு காட்டி , அவர்கள் வாழ்வுக்கு 1941 - 1999 மறுவாழ்வு கொடுக்கவே அவர் அங்கு சென்றார்.
இளமையிலேயே ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்த இவர் 1983ம் ஆண்டு நற்குணசாலியான ஊழியர் கிளாடிஸ் என்ற ஆஸ்திரேலிய பெண்மணியை மணந்தார்.
இவரும் ஏற்கனவே இந்தியாவில் கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றியவர் . இன்னும் செயலில் காட்டிக்கொண்டிருக்கிறார் .
தீயகுணம் நிறைந்த திருட்டு மனிதர் கூட்டம் அன்று ( 23 . 1 . 1999 ) அவர்களைச் சூழ்ந்து கொண்டது . கிரஹாம் ஸ்டெயின்ஸ் , மகன்கள் பிலிப் ( 1 ) , தீமோத்தி 7 ) ஆகியோர் தங்கள் வாகனத்தில் இரவு உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அந்தக் கொடூரம் நடந்தது .
வேடர் கைகளில் சிக்கிய மான்களைப் போல , கயவர்களின் கைகளில் மாட்டி சிக்கிக் கொண்டனர் . அந்தோ பரிதாபம் . சின்னஞ்சிறு பாலகர்கள் தங்கள் தந்தையை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு , கதறி அழுது கொண்டிருக்கும் போதே , அவர்கள் ஈவு இரக்கமற்றவர்களால் மனசாட்சியேயில்லாமல் உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டனர் . கருகிய மலர்களான அவர்கள் கிறிஸ்துவில் மலர்ந்தனர் .
அவர் விட்டுச் சென்ற 80 தொழுநோயாளிகளையும் அவர் மனைவி கிளாடிசும் , மகள் எஸ்தரும் கனிவாய் கவனித்து வருகின்றனர் . . . . .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ....
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment