புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி ஜெரால்ட் மஜெல்லா

மிஷனரி ஜெரால்ட் மஜெல்லா பிறந்த தினம்* ஏப்ரல் 06
*கடவுளின் சித்தமே செயல்படட்டும்*
கடவுள் விரும்புவதை , கடவுள் விரும்புவதுபோல் கடவுள் விரும்பும் வரை இங்கு செய்யப்படுகிறது ? ஜெரால்ட் மஜெல்லா விட்டு அறைக் கதவில் எழுதி வைக்கப்பட்டுள்ள வாசகம் இது.
கடவுள் இவருக்குப் பல அரிய வரங்களை கொடுத்திருந்தார் . ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருந்து வரும் காரியங்களை முன்னறிவிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார் , உடலை ஒடுக்கி கடுந்தவ முயற் சி க ைள மேற்கொண் ட வர் . கட வு ளி ன் ஆலயத்திலேயே எப்பொழுதும் தங்கியிருந்து தியானம் செய்பவர் .
1752ஆம் ஆண்டு கற்பு , ஏழ்மை , கீழ்ப்படிதல் என்ற வாழ்க்கை கட்டுப்பாடுகளுடன் எப்போதும் இறைவனுக்கு விருப்பமானதையே செய்வேன் என்ற சிறப்பு கட்டளையையும் அறிமுகப்படுத்தினார்.
இரட்சகர் சபையில் துணைச் சகோதரராக இணைந்து மிகவும் கீழ்படிந்து நடந்தார் . தோட்டம் கவனித்தல் , கிழிந்த துணி தைத்தல் , உணவு சமைத்தல் , பாத்திரம் கழுவுதல் , வாயிற்காத்தல் போன்ற எளிய பணிகள் செய்து எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார்.
திருவிருந்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் . வாரத்திற்கு மூன்று முறை திருவிருந்தில் பங்கு கொண்டார் . பிறர் தவறுகளை மிகுந்த கனிவுடன் சுட்டிக் காட்டினார் . கடவுளின் விரோதியாக இருக்கும் நீங்கள் எவ்வாறு அமைதியில் வாழ முடியும் என்று மக்களிடம் கேட்பார் . ஜெபத்தினால் பல தேவைகளுக்கு பதில்களை ஆண்டவரிடமிருந்து பெற்று பலரது சாட்சிக்கு பாத்திரமானார் . ஏழையர் நலம் பெற எதனையும் இழக்க ஆயத்தமானார்.
கடவுளின் சித்தத்தை என்றும் மகிழ்ச்சியோடு நிறைவேற்றிய மஜெல்லா இந்நாளில் 1726ம் ஆண்டு பிறந்தார் .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory