புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கருவந்தா

மேல் திருநெல்வேலியில் சுரண்டை- ஊத்துமலை ரோட்டில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கேயுள்ள ஊர் கருவந்தா
வி கே புதூர் தாலுகாவையும் சேர்ந்தது கருவந்தா.
கருவந்தாவு என்பது அதன் ஆதிப் பெயர் , தென்காசியிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருவந்தாவில் கருவேல் மரம் கருகரு வென்று அடர்த்தியாக வளர்ந்திருக்குமாம், தாழ்வான அந்தப் பகுதி சுனைகளும் , நீரூற்றுகளும் மிகச் செழிப்பாய் இருந்ததாம்.
அந்த இடத்து மக்கள் குடியிருக்க விரும்பினர் . அந்த இடத்தை கருவந்தாவு என்று பேர் சொல்லி வழங்கினர் , அதாவது கருவலே மரங்கள் நிறைந்த தாழ்வான இடம் என்பது இதன் பொருள் அதுவே நாளடைவில் கருவந்தா என்றாயிற்று.
கருவந்தாவைச் சுற்றியுள்ள வீராணம் , இருமன்குளம் முதலிய ஊர்களில் மேல்சாதி மக்கள் ஏராளமாக வசித்தனர். அவர்கள் மிகவும் வளமாக வாழ்ந்த கருவந்தாவு ஊர்களில் வந்து கொள்ளையடித்தார்கள் கொடுமைப் படுத்தினார்கள் . பனைத் தொழில் செய்த மக்களை படு கேவலமான தாழ்சாதி என்று கருதினர் .
அவர்களின் ஆடு மாடுகளைக் கொள்ளையடித்தனர் . எதிர்த்தால் இரவில் தீவட்டிக் கொள்ளையடித்தார்கள் , கொடுமை தாங்காத பலர் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள் , இன்று தென்காசியிலுள்ள அநேகர் அப்படி ஆனவர்களே.
அவர்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்பட்டது . 1817 முதல் மிஷனரி ரேனியசும் அவரது குழுவினரும் பரன்குன்றாபுரத்தில் தங்கி யிருந்து பக்கத்துக் கிராமங்களில் ஊழியம் செய்தார்கள் இயேசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை அளிக்கும் வேந்தராக வந்தார் ; மனிதரில் மேல் சாதி கீழ் சாதி என்று கிடையாது : உழைப்பவர்களே ! உயர்ந்தவர்கள் - என்று போதித்தார் .
புதுமையான செய்தி இதயத்திற்கு இதமளித்தது இவர்கள் கிறிஸ்தவர்களானார்கள்.
தங்கள் தொழுகைக்காக ஒரு நிலைப் பிறைக் கோயிலைக் கட்டினார்கள் . அதில் கோயில் மணியாக ஒரு இரும்பு கம்பியைத் தொங்கவிட்டார்கள் . கொள்ளைக் கூட்டம் ஊருக்குள் வந்தால் எச்சரிப்புக்காக அம்மணியை அடிப்பார்கள் அப்போது இவ்ஊரிலுள்ள அனைவரும் அரிவாள் கம்புகளுடன் வந்து நிற்பார்கள் .
எதிரிகள் ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தார்கள். *நாடார் கொள்ளை* என்று அந்தக் காலம் பிரபலமாகப் பேசிய கொடும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.
1824 ல் ஒரு சிற்றாலயம் எழுந்தது .
பள்ளியும் தோன்றியது . மக்களுக்குக் கல்வி அறிவு ஊட்டினார்கள் . வேத உபதேசங்கள் செய்யப்பட்டன .
*முதல் கிறிஸ்தவரான சுப்பையா , ஏசுவடியானாக மாறினார்* அடுத்த தலைமுறையின் மூப்பர் சுவாமிதாஸ்.
30-09-1833 *கருவந்தா* ரேனியஸால் கிறிஸ்து சபையில் சேர்க்கப்பட்ட நாள்
அன்று நடந்த ஆராதனையில்
கருவந்தாவில் இரண்டு குடும்பங்களை தவிர மீதி அனைவரும் கிறிஸ்தவர்கள்
அன்று ஆராதனைக்கு வந்தவர்கள் பெரியவர்கள் 85 பேர் சிறுவர் 25 பேர்
1844 ஆம் ஆண்டு அஸ்திபாரம் போடப்பட்ட கருவந்தாவூர் ஆலயத்தையும் கட்டி முடித்தவர் மேற்கு திருநெல்வேலி அப்போஸ்தலன் கனம் மிஷனரி JTG பேரன்புரூக் அவர்கள்
1849 ஆம் ஆண்டு ஊத்துமலை பரி பவுலின் ஆலயத்தையும் பிரதிஷடை பன்னினார்
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ..
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory