மிஷனரி ப ண் டி த ரா மா பா ய் நினைவு தினம் 05.04.1922
முக்தி மி ஷ ன் ஆ த ர வ ற்ற பெண் க ளி ன் அடைக்கலப்பட்டணம் இது.
திக்கற்ற பெண்களின் உறைவிடம். தேவதாசிகளின் தெய்வீக நிலையம் , இந்திய நாட்டின் வரலாற்றில் சுமார் 150 வருடங்களுக்கு முன் , குழந்தைத் திருமணம் நடைமுறையிலிருந்தது.
இளம் வயதில் கணவர் மரித்துவிட்டால் மனைவி தீயில் எரித்துக் கொல்லப்படும் துயரச் சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
*பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.*
தாழ்ந்த குல சாதியினர் மிகவும் இழிவுப்படுத்தப்பட்டனர். இந்நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆண்டவர் ஓர் விடுதலைப் போராட்ட வீராங்கனையைத் தேர்ந்தெடுத்தார்.
அவர்தான் *பண்டித ராமாபாய்*. இளம் வயதிலேயே பல இன்னல்களை வாழ்வில் அனுபவித்திருந்தாலும் , அவைகளைப் பொருட்படுத்தாது சமூகத்தீமைகளை வேருடன் அகற்றதன்னை அர்ப்பணித்தார் .
பூனாவில் " சாரதா சதன் " என்ற அமைப்பை ஏற்படுத்தி , ஒதுக்கப்பட்ட இந்திய விதவைகளுக்கும் , அனாதை பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கொடுத்தார் . அப்பெண்களுக்கு கைத்தொழில்களை கற்றுக் கொடுத்தார். தேவதாசி முறைகளை அகற்ற பாடுபட்டார்.
இதனால் இந்து பூசாரிகள் ராமாபாயின் விரோதிகளாக மாறினர்.
சமுதாயக் கொடுமைகளுக்கு எதிராக பலநூல்களை எழுதினார் .
வாழ்வில் சறுக்கி விழுந்த பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியப் பெண் இவர் . இந்தியாவிலேயே *முதன் முதலாக பாலர் பள்ளியையும் ஆரம்பித்தார்.*
கண்ணொளி இழந்தவர்களுக்கு ' பிரெய்லி எழுத்து ' முறையைக் கற்றுக் கொடுத்தார் . பண்டித ராமாபாய் *ஜெபத்தையே தனது சக்தி நிலையமாகக்* கொண்டிருந்தார் .
மராட்டிய மொழியில் வேதாகமத்தைத் தந்து , ஆயிரமாயிரம் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.
அடைக்கலமற்றோரின் அன்னையான ரமாபாய் இதே நாள் ஏப்ரல் 5 , 1922இல் நிலையான அடைக்கலத்தில் பிரவேசித்தார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment