மிஷனரி எமில் ரிச்சர்டு தரிசனத்தின் சொந்தக்காரரானார்
சுடர்விட்டு பிரகாசிக்கும் கிறிஸ்டியன் மிஷன் சர்வீஸ்
சிறுவிதை ஆல மரமாகும். அதிலிருந்து வரும் விழுதுகளும் , எண்ண ற்றவையாகத் தொடரும். ஆம் சிறு எண்ணங்களும் . தரிசனங்களும் அப்படியே ! அவை விரிவடைந்துக் கொண்டே செல்லும் . ஆண்டவர் தரும் தரிசனங்கள் நிச்சயமாகவே பெருகி , பலருக்குப் பயனைத் தரும்.
*எமில் ரிச்சர்டு தரிசனத்தின் சொந்தக்காரரானார்*
இந்தியாவின் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்காக . அவர் உள்ளம் ஏங்கியது . உடனே தன்னை அர்ப்பணித்தார் . 1957ம் ஆண்டு , இந்தியாவின் ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு நிறுவனத்தை ஜெர்மனி தேசத்தில் ஆரம்பித்து இந்தியாவில் கால் பதித்தார் ,
இன்று இந்தியாவில் 70க்கும் மேற்பட்ட்ட இடங்களிலும் , அயல்நாடுகளிலும் தான் கிளைகளைப் பரப்பி , பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை , வாழ்வின் உயர்ந்த நிலைக்கு உயர செய்து , ஆயிரமாயிரம் மாணவ , மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றி , சுடர்விட்டு பிரகாசிக்கும் கிறிஸ்டியன் மிஷன் சர்வீஸ் " ( CMS ) என்பதே அந்த நிறுவனம் , உண்ண உணவிற்குக் குறைவில்லை ; உடுக்க உடைக்குப் பஞ்சமில்லை ; தங்கும் இடத்திற்கோ அளவில்லை ; உலகியல் அறிவுக்கு பள்ளிகள் ; உன்னதரைப் பற்றி அறிவதற்கு அனுதினமும் காலை மாலை தியானங்கள் ; விசுவாசத்தில் நிலைக்க ஜெப ஜீவியாங்கள் , மொத்தத்தில் C . M . S . ஒரு குட்டிப் பரலோகம் என்றே சொல்லலாம் , அர்ப்பணித்த அடியார்களால் ஆச்சரியமான தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் , உருவாகிக்கொண்டும் இருக்கின்றனர் . எமில் ரிச்சர்டு இந்திய ஏழைகளின் கனவை நனவாக்கினார் .
பாதையறியா மக்களுக்குப் பாதையைக் காட்டி . அவைகளில் நடக்கும் பக்குவத்தையும் கொடுத்தார் . பரலோக வாழ்வை இகத்தினில் கொடுக்க இதயத்தைத் திறந்தார் . இவரால் இளம் இதயங்கள் இன்பமுடன் தங்கள் வாழ்வைத் தொடர்கின்றனர் . எமில் ரிச்சர்டு என்ற விதை ஆலமரமானது.
வரலாற்று பொக்கிஷங்களில் திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment