புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திடியூர்

தங்கள் சாமியினும் வல்லமையான சாமி ஒருவர் இருக்கிறாரா?*
நெல்லை நாட்டில் பச்சையாறு ஒரு குட்டி ஜீவநதி , அதன் கீழ் கரையில் ' திதி கொடுப்பதற்காகப் பல ஊர்களிலுமிருந்து மக்கள் கூடுவர் . இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் ஒரு நிகழ்ச்சி திதி கொடுப்பதாகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் செழிப்பு நன்றாயிருந் தமையால் பச்சையாற்றின் கரையில் சோறு பொங்கி திதி கொடுக்கும் வழக்கமிருந்தது. கீழக்கரையில் அமைந்த அந்த இடத்திற்கு ' திதியூர் ' என்ற பேர் ஏற்பட்டது . மக்கள் குடியேறி மக்கள் வாயில் அச்சொல் மருவி , மருவி ' திடியூர் ' என்றாயிற்று . மேல்கரையில் ஒரு ஊரும் , சற்று மேற்கே தள்ளி இன்னொரு ஊரும் வரவே கீழத்திடி யூர் , மேலத்திடியூர் , நடுத்திடியூர் என்று மூன்று ஊர்கள் தோன்றின.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு . . . மேலத்திடியூரில் கொடை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது . குடும்பத்திற்கு ஒருவர் சாமியாடிக் கொண்டிருந்தனர் . அச்சமயத்தில் ஓர் ஆங்கில மிஷனெரியும் அவரோடு சிலரும் கைத்தாளங்களோடு பாட்டுப் பாடிக்கொண்டு அங்கு வந்தனர் . பாட்டொலி கேட்டு சாமியாட்டம் நின்று விட்டது. கொட்டு மேளங்களை முழக்கியும் சாமி வர வில்லை . வந்தவர்கள் இயேசு சாமி பற்றிய நற்செய்தியை அறிவித்தனர். தங்கள் சாமியினும் வல்லமையான சாமி ஒருவர் இருக்கிறார் " ன்று கண்டு அந்த இடத்திலேயே இரு குடும்பத்தார் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள் .இந்து பீடங்கள் இருந்த அதே இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் தோன்றியது.
வரலாற்று சுவடுகளிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory