அதிகாலை ஜெபத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்த மிஷனரி
கி . பி . 251 , எகிப்தின் வட பாகத்தில் கோமா என்ற கிராமம் . மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம் ஒன்று அங்கு வசித்தது . அக்குடும்பத்தில் தலை மகனாக பிறந்தார் அந்தோணி .
கிறிஸ்தவ பெற்றோர்கள் இவரை மிகவும் கண்டிப்புடனும் நல் நடத்தையுடனும் வளர்த்தனர் . தீய நட்பினாலும் , கெட்ட பேச்சுக்களாலும் கறைபட்டுவிடாமல் காக்க சிறந்த இறையியல் அறிஞர்களைக் கொண்டு கல்வி கற்றுக் கொடுத்தனர் . அந்தோணி தனது இருபதாவது வயதை அடையும் முன்பே அவர் பெற்றோர்கள் மரித்துப்போனது பரிதாபம்.
கடவுளையே தியானித்து தூய வாழ்க்கை வாழ நினைத்த இவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து துறவற வாழ்வை மேற்கொண்டார் . ரொட்டியையும் , தண்ணீரையும் உணவாக உட்கொண்டார் . கிராம மக்களுக்கு தொந்தரவு ஏற்படாதபடி மனித நடமாட்டமில்லாத காட்டிற்குச் சென்று ஜெபத்திலும் , தியானத்திலும் தன் நாட்களைக் கழித்தார்.
ஒரு சமயம் , சில திருடர்கள் அவரைப் பிடித்து , அடித்து குற்றுயிராய் விட்ட போதிலும் கிறிஸ்துவின் அன்பை நினைத்து தன் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தார் . அந்தோணியாரின் தூய வாழ்க்கையையும் , சுய வெறுப்பையும் , மக்கள் மீதுள்ள அன்பையும் கண்ட சுற்றுபுறத்தார் அவர்மீது அளவற்ற மதிப்பு கொண்டனர்.
ஜெப நேரத்தை தவிர மீதமுள்ள நேரத்தை நிலத்தைப் பண்படுத்தி பயிரிடும் வேலை செய்து வந்தார் . அலெக்சாண்டிரியா பட்டணத்தில் இவரின் பிரசங்கத்தால் மனந்திரும்பியவர்கள் எண்ணற்றோர் ஆவர் . வானத்திற்கு நேரே தன் கைகளை உயர்த்தி ஜெபிக்கும் பழக்கம் உடைய இவர் . அதிகாலை ஜெபத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்த இம்மகான் தனது 105வது வயதில் தனது மரண நாளை முன்னறிவித்து அவ்விதமே இறைபாதம் சரணடைந்தார் .
அருட்பணியாளர் புத்தகத்தில் திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment