கிறிஸ்துவைக் குறித்த சிந்தனைகளினால் தூங்க முடியவில்லை .
வைணவ குடும்பம் , சிறந்த தமிழ் பண்டிதரின் மகனாகப் பிறந்தார் கிருஷ்ணப்பிள்ளை . சிறுவயதிலேயே வைணவ நூல்கள் அனைத்தையும் மனப்பாடமாகக் கற்றுத் தேறினார் . வைணவ சமயத்தின் தீவிர பக்தனாய் மாறினார் . கிருஷ்ணபிள்ளைக்குத் தமிழ் மீது அதிக நாட்டம் ; இலக்கண சாஸ்திரங்கள் அனைத்தையும் எளிதாய் கற்று தமிழ் பண்டிதரானார்.
அச்சமயம் , வேதாகமக் கல்லூரி ஒன்றிற்கு தமிழ் ஆசிரியர் தேவைப்பட்டதால் அங்கு தம் பணியை ஆரம்பித்தார் . ஆனால் கிறிஸ்தவர்களிடம் தொடர்பு கொள்வதை அவர் விரும்பவே இல்லை.
ஒருநாள் ஹக்ஸ்டபிள் என்ற மிஷனெரி ஒரு புதிய ஏற்பாட்டை கிருஷ்ணப்பிள்ளைக்கு கொடுக்கவே , வெறுப்படைந்த அவர் தன் வேலையையும் விட்டுவிட்டார் . ஆனாலும் மிஷனெரியின் அன்பு அவரை சிந்திக்க வைத்தது.
அந்நாட்களில் அநேக உயர்குல வாலிபர்கள் கிறிஸ்துவுக்காக தங்கள் இதயத்தைத் திறந்து கொடுத்தனர் . அவர்களில் தனக்கோடி ராஜீ என்பவரும் ஒருவர் . அவர் கிருஷ்ணப்பிள்ளைக்குகிறிஸ்துவின் அன்பைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறினார்.
ஓர் இரவு , கிருஷ்ணப்பிள்ளையால் தூங்க முடியவில்லை . கிறிஸ்துவைக் குறித்த சிந்தனைகள் உள்ளத்தில் நிறைய ஆரம்பித்தது . இதயம் மெல்லத் திறந்தது . கிறிஸ்துவை தன் உள்ளத்தில் வரவழைத்தார் . அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
தமிழ் பண்டிதரான கிருஷ்ணபிள்ளை , கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடல்கள் எழுதவும் , பாடவும் ஆரம்பித்தார் . இரட்சண்ய யாத்ரீகம் , இரட்சண்ய மனோகரம் என்ற அரிய நூல்கள் அவர் மூலமாக வெளிவந்தவையே . மாபெரும் மிஷனெரிகளான சர்ஜென்ட் , உவாக்கர் , ஏமிகார்மைக்கேல் மற்றும் பலருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த இவர் , 1900ஆம் ஆண்டு என்றும் இறைவனை புகழ்ந்து பாடவிண்ணகம் சென்றார்.
அருட்பணியாளர்களின் அறிய படைப்பிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment