மிஷனரி வில்லியம் ஹண்ட்டர் நினைவு தினம்* 1535 - 1555
வில்லியம் ஹண்ட்டருக்கு வயது 19 , துள்ளித் திரியும் வ IT லிபப் பருவம் . ஆனால் , கை கால்கள் கட்டப்பட்டவனாக மக்கள் வேடிக்கைப் பார்க்கும்படியாக , நிறுத்திவைக்கப்பட்டிருந்தான்.
நீன்ட அங்கி அணிந்த ஒருவர் வந்தார் . வில்லியத்தை மிகுந்த கோபத்துடன் முறைத்துப் பார்த்தார் . அவருடைய உருவம் பார்ப்பதற்கு மிகுந்த பயமாயிருந்தது . சிங்கத்தின் கர்ஜனை போலக் கர்ஜிக்க ஆரம்பித்தார் . இயேசுவை மறுதலித்து விடு , இல்லையானால் எரிந்து சாம்பலாகி விடுவாய் !
ஹண்டர் புன்முறுவல் செய்தான் . தன்னுள் இயேசு இருப்பதை எண்ணி தைரியம் கொண்டான் . கிறிஸ்துவுக்காக எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தயாரானான் . இங்கிலாந்தை ஆட்சி செய்த மேரி அரசியின் சட்டப்படி திருவிருந்தில் பயன்படுத்தப்படும் திராட்சைரசமும் அப்பமும் ஹண்டரின் முன் வைக்கப்பட்டன . அவைகளின் முன் விழுந்து வணங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டான்.
ஆனால் ஹண்ட்ரோ இயேசுவை மட்டுமே வணங்குவதாகவும் வேறே பொருட்களை வணங்குவதில்லை என்றான் . பெற்றோர் அவனை நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் வளர்த்திருந்ததால் தன் பக்தியில் உறுதியாகக் காணப்பட்டான் . எனவே 9 மாதங்கள் கடும் சித்திரவதைகளைச் சிறைச்சாலையில் அனுபவித்தான் . எனினும் அவன் விசுவாசம் எள்ளளவும் குறைந்து போகவில்லை .
இறுதியாக வில்லியத்தை சுட்டெரிக்கும் நாள் வந்தது . இரத்த சாட்சியாக மரிப்பதற்குச் சிறிதும் அஞ்சாமல் முகமலர்ச்சியுடனும் , தைரியத்துடனும் கம்பத்தை நோக்கிச் சென்றான் . கொடூரர்கள் அவன் உடலை தீ வைக்க ஆரம்பித்தனர் . வில்லியம் வானத்தை அண்ணாந்து பார்த்து " தேவனுடைய குமாரனே என்மேல் பிரகாசியும் " என்று கூறும் வேளையிலே அவன் உயிர் மேகங்களுடனே மேலெழும்பியது.
அருட்பணியாளர்களின் வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டயது.
No comments:
Post a Comment