புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஏமி கார்மைக்கல்

தமிழ்நாட்டுப் புடவையில் மேனாட்டு மிஷனெரி*

ஆரணங்கு ஏமி கார்மைக்கலுக்குத் தமிழ் நாட்டு புடவை எவ்வளவு பொருத்தமாயிருந்தது !

இதர மிஷனெரிகள் இஃது ஒரு வேண்டாத மாறுதல் எனக் கருதினாலும் உவாக்கர்
அவர்கள் இதை முற்றிலுமாக வரவேற்றார்.

அம்மையாரும் எந்தவித உணர்ச்சிவசப் பட்டும் இவ்வாறு செய்யவில்லை.

ஜப்பானில் மூதாட்டி ஒருவர் அம்மையாரின் மேனாட்டு உடையின் காரணமாகத் தம் கவனத்தைச் சிதறவிட்டாரே , அப்பொழுதே அம்மை யார் ஜப்பானிய கிம்மனோ அணிந்துகொண்டார்.

அன்று அவர் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி இப்பொழுது அவர் இந்தியப் பெண்மணியாக பண்ணைவிளை வட்டாரத்தில் பணி செய்யப் புறப்பட்டுவிட்டார்.

தம்மில் ஒருவராகிவிட்ட அம்மையாரைக் கண்ட பெண்கள் அவரை இப்பொழுது அந்நிய நாட்டவராகக் கருத வில்லை.

அம்மையாரின் அன்பு இவர்களைக் காந்தமெனக் கவர்ந்தது.

பெற்ற அன்னையினும் உற்றவராக அவரைக் கருதி அவரை *' அம்மா ! '* என அழைத்தனர்.

நாமும் இனி ஏமி கார்மைக்கல் அம்மை யாரை அவ்வாறே அழைப்போம் !

வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ....

மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory