புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருமண்டல சொத்துக்கள் பற்றிய தகவல்கள்

திருமண்டல சொத்துக்கள் பற்றிய தகவல்கள்* தெரிந்து கொள்ள மட்டும் மூலச் சட்டத்திலிருந்து......
*ஆட்சி*
திருமண்டலப் பெருமன்றத்திற்கோ அல்ல அப்பெருமன்றத்திற்குப் பொறுப்பானக குழு அல்லது மனறம் அல்லது நிறுவனத்திற்கோ பாத்தியமான சகல நிலையானது சொத்துக்களும் அச்சொத்து எந்தெந்த குழு மன்றத்திற்குரியதோ அந்தந்த குழு மன்றத்திற்காகவே திருநெல்வேலித திருமண்டல அறக் கட்டளையின் பேரில் இருக்க வேண்டும் . இவ்வத்தியாயத்தில் இச்சொத்துக்கள் இனிமேல் திருமண்டலம் சொத்துக்கள் என்றழைக்கப்படும் . இச்சொத்துக்களின் வரிசையடங்கிய ஒரு பதிவுப் புத்தகம் திருமண்டல கொடுக்கப் அலுவலகத்தில் இருக்க வேண்டும் . அப்புத்தகத்தில் இச்சொத்துக்கள் எந்தெந்தக் கழகத்தோடு சேர்க்கப்பட்டிருக்கிற தென்றும் , என்னென்ன சிறப்பான சட்டதிட்டங்களுக்குப் பட்டதாய் ஆட்சி செய்யப்படுகிறதென்றும் காட்டப்பட ஆல் அவர் வேண்டும் . குறிப்பிட்ட ஒரு சொத்து எந்தக் கழகத்திற்கு இலது . சம்பந்தப்பட்டதென்னும் ஒரு விவகாரமாவது , சந்தேகமாவது தேவைகள் உண்டானால் திருமண்டலச் செயற்குழுவில் மேற்படிச் செயல் தீர்மானிக்கப்படும்.
*பராதீனம்*
ஒரு குறிப்பிட்டச் சொத்தை இந்த அறக்கட்டளை ஆட்சிக்குட்படுத்தும் பத்திரத்தில் கண்டிருக்கும் சிறப்பு நிபந்தனைகளின்படியேயன்றி எந்தத் திருமணடலக சொத்தையும் , திருமண்டலச் செயற்குழுவின் அனுமதி யில்லாமல் கிரயம் , அடமானம் , ஒத்தி செய்வதோ , நீண்டகால கட்டுக் குத்தகைக்கு விடுவதோ , நியாயமாகாது .மேற்படி பராதீனத்தை ஆலோசிக்கும்படிக் கொண்டு வந்திருக்கும் கூட்டத்தில் வருகை தந்திருந்து வாக்குக் கொடுக்கும் .உறுப்பினர் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாதவர்களின் சம்மதத்தின் பேரில் மேற்படி அனுமதி பிறந்திருக்க வேண்டும் .இவ்வனுமதியை மறுக்கப் பேராயருக்கு உரிமையுண்டு .மேற்படி சபை செய்த இப்படிப்பட்ட ஓர் தீர்மானத்திற்குச் சம்மதம் கொடுக்கப் பேராயர் மறுக்குங்கால் குறைந்தது ஓராண்டு கழித்து இத்தீர்மானம் மறுபடியும் மேற்படிச் செயற்குழுவிற்குக் கொண்டு வரப்பட்டு அப்போது வருகை தந்திருந்து வாக்குக் கொடுக்கும் உறுப்பினரில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாதவர்களுடையச் சம்மதம் பெற்றால் அதற்கு மேல் அதை மறுக்கப் பேராயருக்கு அதிகாரம் இல்லை.
*நடத்துதல்*
ஓர் திருமண்டலம் சொத்தை ஆளுகை செய்வது . திருமண்டலப் பதிவுப் புத்தகத்தில் எந்தெந்தச் சொத்து எந்தெந்தக் குழு மன்றங்கள் , நிறுவனத்திற்குரியதென்றும் காட்டப்பட்டிருக்குமோ அந்ததந்தக் கழகத்திற்கே உரியது . திருமண்டலச் செயற்குழுவின் மேல் விசாரணைக்குட்பட்டும் அந்தந்தச் சொத்துக் கையளிக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்டும் நடத்தி வரப்பட வேண்டும் . அவ்வகைக்கென்றுக் கொடுக்கப்பட்டப் பணத்திலிருந்து நிலங்களைத் தகுந்த விதமாய்ப் பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் கட்டடங்களை நல்ல நிலைமையில் வைத்துக் கொள்வதற்கும் குழு அல்லது மன்ற முதலாளியோ நிறுவனத்தின் தாளாளரோ அல்லது இதற்கென்றுத் திருமண்டலச் செயற்குழு நியமிக்கும் ஒருவரோ பொறுப்பாவர் . அவைகளின் நிலைமையைப் பற்றி அவர் திருமண்டலப் பொருளாளருக்கு ஆண்டுதோறும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் . இச்செயலில் நேரிடும் எவ்வித ஒழுங்கீனத்தையும் தம் பொருளாளர் மூலமாய்க் கவனித்து எடுத்துக் காட்டுவதும் இதர ஒழுங்குகள் ஏற்படாமல் அல்லது ஒழுங்குகள் ஏற்பட்டுச் சித்தி பெறாமல் இருக்குமானால் திருமண்டலத்தின் சொத்துக்கள் அனைத்தும் தகுந்தபடி ஆளுகை செய்ய வேண்டிய ஒழுங்குகள் செய்வதும் திருமண்டலச் செயற்குழுவின் கடமையாகும்.
*1921ம் ஆண்டு சி . எம் . எஸ் . சங்கம் கையளித்தச் சொத்து*......
தொடரும் ... நாளை...14/03/2019

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory