*சுவி . தாவீது சுந்தரானந்தனார் உபதேசியார்*
முதலூர் கி . பி . 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்பொழுது தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட நாடார் குலத்தின் நற்செய்தியை பறைசாற்ற கடவுளால் தெரிந்தெடுக்கபட்டவர் அவ்வின மக்களின் தலைவர் என்று ஐரோப்பாவில் அறியப் அவ்வினத்தின் *முதல் கிறிஸ்தவ உபதேசியார்.*
நெருக்கடி . இன்னல்கள் பிரச்சனைகளில் இருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாத்தவர் , சாயர்புரம் நாசரேத் , சமாரியா , பெத்லகேம் , எருசலேம் , கடாட்சபுரம் அன்பின் நகரம் , சுவிசேஷபுரம் போன்ற பல கிறிஸ்தவ குடியேற்றங்களின் முன்னோடி , முதலூரின் தந்தை என்று அழைக்கப்படும் *தாவீது சுந்தரானந்தன்* சாத்தான்குளத்திற்கும் முதலூருக்கும் இடையில் உள்ள காலன்குடி என்னும் சிற்றூரைச் சார்ந்தவர்.
இவரது இயற்பெயர் சின்னமுத்து . இளம் வயதிலேயே பெற்றோர் இறந்துவிட , அவரும் , அவரது சகோதரியும் விஜயராமபுரம் என்ற சிற்றூரில் வசித்துவந்த அவரது தாய்மாமா அத்தையினால் வளர்க்கப்பட்டனர்.
இளம்வயதிலே மிகவும் புத்திக்கூர்மைமிக்கவராய்த் திகழ்ந்த சுந்தரானந்தன், மருத்துவம் , தத்துவம் , ஜோதிடம் ஆகியவற்றில் மிக்க ஆர்வம் காட்டினார்.
ஆனால் அவரின் போக்கு அவரது அத்தைக்கு பிடிக்கவில்லை . அவரது 17வயதில் , ஒருநாள் கொடுத்த வேலையை செய்ய தவறியதற்காக அவரது அத்தை அவரை தயிர்கடையும் மத்தால் அடித்துவிட்டார்.
அதனால் வருத்தமுற்ற சுந்தரானந்தன் வீட்டைவிட்டு வெளியேறி கருப்பட்டி ஏற்றிச் சென்ற வண்டியின் பின்னால் இராஜபாளையம் சென்றார். அங்கிருந்து தஞ்சாவூர் சென்றார்.
அங்கு அருட்திரு . சுவார்ட்சுடன் தொடர்பு ஏற்பட்டு இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தார்.
*1798ம் ஆண்டு நெல்லைப் பகுதிகளில் ஊழியம்* செய்து வந்த - சத்தியநாதன் தன் ஊழியத்திற்கு உதவியாக ஒரு உபதேசியாரை அனுப்பும்படி சுவார்ட்சு ஐயரை வேண்ட , சுவார்ட்சு ஐயரவர் தாவீதை அங்கு உதவியாக அனுப்பினார்.
தமது 21 வயதில் தாவீது மீண்டும் நெல்லை வந்தார் . கிளாரிந்தாவின் மேற்பார்வையில் நடைபெற்று வந்த பள்ளியில் ஒரு வாரம் பணி செய்துவிட்டு தான் வளர்ந்த ஊராகிய விஜயராம் புரத்திற்குச் சென்றார் .
மரித்துவிட்டார் என்று கருதப்பட்ட சுந்தரானந்தன் , விடு திரும்பியது அவரது உறவினர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. தாவீதும் காலம் தாழ்த்தாது கிறிஸ்துவில் தான் கொண்டிருக்கும் விசுவாசத்தையும் கிறிஸ்துவில் தான் கண்ட இன்பத்தையும் தன் உறவினரோடும் இனத்தாரோடும் பகிர்ந்துகொண்டார்.
பின் பாளையங்கோட்டைக்குத் திரும்பி , 1797ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி சத்தியநாதனுடன் மீண்டும் விஜயராமபுரத்துக்கு வந்தார்.
தாவீதின் இனத்தார் அவர்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று கிறிஸ்துவின் ' ' சுவிசேஷத்தை ஆவலுடன் கேட்டனர் . தொடர்ந்து அப்பகுதியில் *16 ' நாட்கள்* செய்த ஊழியத்தின் பயனாக நான்கு குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர்.
விஜயராமபுரத்தில் பள்ளிகூடம் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டது.
புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. இவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக கிறிஸ்தவரல்லாதவர் களிடமிருந்து எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
விஜயராமபுரத்தில் இருந்த அவர்களின் சிறு ஆலயம் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டது.
அவமானம் , நிந்தை , கேலிபேச்சுகள் பெருகின.
இந்த இடர்களிலிருந்து நீங்கி கிறிஸ்தவர்கள் நிம்மதியாக ஓரிடத்தில் வாழ வேண்டுமென்று தாவீது விரும்பினார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இராணுவ ' கேப்டன் எவரெட் என்பவர் தாவீதுக்கு உதவ முன்வந்தார். அவரளித்த . பணத்தைக் கொண்டு அடையல் என்ற கிராமத்தின் அருகில் ஓர் இடத்தை தாவீது வாங்கினார் .
இப்புதிய நிலத்தில் ஒரு புதிய ஜெப அறையைக் கட்டினார் . கிணறு ஒன்றையும் தோண்டினார் . கிறிஸ்தவர்கள் இப்புதிய இடத்தில் குடியேறுமாறு அழைப்புக் கொடுத்தார்.
விஜயராமபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் 1799 - ல் இங்கு குடியேறினர் .
*இப்புதிய குடியிருப்பு முதலூர் என்று ! அழைக்கப்பட்டது*
முற்றிலும் கிறிஸ்தவர்கள் அடங்கிய முதல் கிராமமாகையால் அப்பெயர் பெற்றது.
1800ல் முதலூரின் மக்கட்தொகை 200 ஆக பெருகியது . தாவீது , முதலூரின் உபதேசியராக பணியாற்றினார்.
கிறிஸ்தவர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பொழுதெல்லாம் இன்னல்களை தாங்க இயலாது கிராமங்களில் இருந்து முதலூரில் குடியேறினார்கள் மேலும் தாவீதின் அயராத உழைப்பால் அவரது இனமக்கள் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஏப்ரல் 1802க்கும் ஜூன் 1803க்கும் இடையில் பநாதன் 70 கிராமங்களை சார்ந்த 5382 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
திருச்சபை வளர்ந்து பெருகியது . மீண்டும் துன்பக் காலம் ஆரம்பித்தது .
முதலூர் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டார்கள் . 1803 ம் ஆண்டு மே 22 - ம் நாள் முதலூர் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டது.
பல இன்னல்கள் மத்தியிலும் முதலூர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு சாட்சியாக நின்றனர் , தொடர்ந்து பலர் கிறிஸ்துவண்டை சேர்ந்தனர் . நாளடைவில் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பம் அதிகமானது . தாவீதால் அநீதியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
தம் மக்களைக் கொடுமையிலிருந்து காக்க வேண்டும் என்று தாவீது எண்ணினார் .
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று எண்ணின் தாவீது *தடிக்கம்புக்காரர்* என்ற கிறிஸ்தவ இளைஞர் குழுவை ஆரம்பித்தார்.
எங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனரோ அங்கு தடிக்கம்புக்காரர் சென்று கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து விட்டு திரும்புவர்.
ஆனால் இந்தக் காரியம் கடும் விமர்சனத்திற்குள்ளானது..
தாவீதுக்கும் பிற ஊழியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை வளர்த்தது.
சுற்றுப்புறத்தில் இருந்த கிறிஸ்தவரல்லாத மற்ற மதத்தினர் தாவீதின் இந்த தடிக்கம்புக்காரர் குழுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர்.
அவரைக் கொல்வதற்கும் வகைதேடினர். 1806ம் ஆண்டு பெத்லகேம் என்ற ஊரில் தாவீது இறந்து கிடந்தார் .
*குட்டம் கிராமத்து மக்கள் தாவீதுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர்*, அதன் விளைவாக அவர் இறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்பினர்.
எப்படியாயினும் நம் மண்ணில் இருந்து கிறிஸ்துவுக்காய் எழுந்த மற்றும் வீழ்ந்த முதல் வித்து தாவீது சுந்தரானந்தம் என்பது மறக்க முடியாத உண்மை.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment