புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வருடச் சந்தாக் காணிக்கை படைக்கும் பண்டிகை

வருடச் சந்தாக் காணிக்கை படைக்கும் பண்டிகை*
1859 ஆம் ஆண்டு தாமஸ் ஐயரின் மேற்பார்வையிலிருந்த சேகரங்களில் புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் 1400 பேர். இது மிஷனெரி மற்றும் உபதேசிமாரின் கடின உழைப்பால் கிடைத்தது .
இன்று ஞானஸ்நானம் நடைபெறுகின்றது.
பெரும்பாலும் அவைகள் கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கும் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தான்.
மனந்திரும்பி ஆண்டவரை ஏற்றுக்கொண்டு வருகின்றவர்கள் இன்று வெகுகுறைவு.
1858ஆம் ஆண்டு வருடாந்திர காணிக்கை படைக்கும் பண்டிகையை 17 இடங்களில் நடத்தினார்.
மொத்தம் காணிக்கை 1 , 100 ரூபாய் . 1859 ஆண்டு 13 இடங்களில் இப்பண்டிகை நடந்தது.
*மொத்த காணிக்கை ரூ . 2980*.
இப்பண்டிகையை ஒரு சபையில் வைக்கும்பொழுது அருகில் உள்ள சபையாரும் அப்பண்டிகைக்கு தங்கள் உபதேசியாருடன் வருகை தந்தனர்.
' தாமஸ் ஐயர் பிரசங்கத்தார்.
ஒவ்வொரு சபை உபதேசியாரும் , கொடுப்பதினால் உண்டாகும் ஆசீர்வாதத்தைக்குறித்துச் சிறிய பிரசங்கம் செய்தனர்.
பின்பு ஒவ்வொரு உபதேசியராக முன் வந்து அமர்ந்தனர்.
அந்த சபை குடும்பத் தலைவரின் பெயரை தாமஸ் ஐயர் வாசித்தார்.
கடந்த ஆண்டு அவர் செலுத்திய தொகை அந்த நோட்டில் எழுதப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு செலுத்தும் தொகையைக் குடும்பத் தலைவர் சொல்லுவார்.
அதை தாமஸ் ஐயர் நோட்டில் எழுதுவார்.
இவ்விதமாக சந்தாப் பண்டிகை கொண்டாடப்பட்டது .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory