மிஷனெரி ஜாண் ஃபாக்ஸ் நினைவு தினம்* ஏப்ரல் 8
இங்கிலாந்தில் சீர்திருத்தம் ஏற்பட்ட காலம் . ஒவ்வொரு திருச்சபைகளும் புதுப்பொலிவுடன் செயல்பட ஆரம்பித்தன . வேதாகமம் பார்த்திராத மக்கள் , புதிய வேதாகமத்தை தங்கள் கைகளில் பெற்றுக்கொண்டனர்.
எராஸ்மஸ் என்பவர் கிரேக்க மொழியிலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார் . இதனால் , வேதப் புத்தகத்தின் சத்தியங்களை அறிந்து கொண்ட மக்கள் , தவறான கோட்பாடுகளுக்கும் , கொள்கைகளுக்கும் எதிர்த்து நின்றனர் . சபை சீர்படத் தொடங்கியது.
மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க கோட்பாடுகளுக்கு எதிராக , 95சட்டதிட்டங்களை விட்டன்பர்க் தேவாலயத்தில் அறைந்து வைத்தார் . அக்காலக்கட்டத்தில் , வாழ்ந்தவரே ஜான் ஃபாக்ஸ் . 1534ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இறைப்பட்டம் பெற்ற இவர் , சீர்திருத்த சிந்தனைகளை உடையவராகக் காணப்பட்டார்.
இவர் லேட்டிமர் மற்றும் வில்லியம் டிண்டேல் என்பவர்களை சந்தித்து , அவர்களின் தரிசனங்களோடு தன்னையும் சேர்த்துக் கொண்டார் . லண்டனில் சிறந்த போதனை ஆசிரியராக விளங்கிய இவர் , துண்டு பிரதிகள் மூலம் , தனது கருத்துகளை மக்கள் உணரச் செய்தார் . இயேசுகிறிஸ்துவும் - அந்திகிறிஸ்துவும் என்ற தலைப்பிலும் , நன்மை - தீமை என்ற கருத்திலும் , உண்மை - பொய் என்ற சிந்தனையிலும் பல கட்டுரைகளை எழுதி மக்கள் கைகளில் கொடுத்தார் . இதனால் மக்கள் உண்மையை அறிந்து தீமையான காரியங்களை விட்டுவிலகி , இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
அப்போதைய அரசுக்கு எதிராக இவர் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . பல சீர்திருத்தவாதிகளின் மரணம் , இவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது . அவர்கள் வாழ்வைக் குறித்ததான , மிகச்சிறந்த நூலை எழுதினார் . " ஃபாக்ஸ் புக் ஆப் மார்டையர்ஸ் " என்பதே அச்சிறந்த நூல் . இதில் , இயேசுகிறிஸ்துவுக்காக தங்கள் உயிரை பணயம் செய்த உத்தம மனிதர்களின் உண்மை வரலாறுகள் இடம் பெற்றுள்ளன . வாசிப்போரை கிறிஸ்துவுக்குள் ஈர்க்கும் , சிறந்த கருவூலத்தை உலகிற்கு தந்தவர் இவர்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment