புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மரியான் உபதேசியார்

*மரியான் உபதேசியாரும் சிவகாசி திருச்சபையும்*
நெல்லைத் திருமண்டிலம் பல அறிஞர்களையும் , கவிஞர்களையும் , பக்தர்களையும் தந்த சிறந்த திருமண்டிலம் அம்மாவட்டத்தில் *ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் தோன்றியவர்தான் மரியான்* ஏழாயிரம்பண்ணை உபதேசியார்.
இவர் ஞானஸ்நானத்திருச்சபை ஊழியர் , 
ஜெபவீரர் ,
வத்றாப்பு , மாதாங்கோவில்பட்டி , ,
பனையடிப்பட்டி ,
அன்பின்நகரம் ,
கிறிஸ்தியான்பேட்டை ,
சிவகாசி
போன்ற ஊர்களில் இவர் பணியாற்றி திருச்சபையைக் கட்டினார்.
நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் *புதுச்சுரண்டை* என்ற கிராமத்தில் பிறந்த அருணாச்சலம் 20 - 7 - 1816 இல் சிவகாசியில் அவரது குடும்ப மக்களோடு வசித்துவந்தார்.
மிஷனெரிமார்களின் தொடர்பினால் கிறிஸ்தவரானார்.
40 வயதில் 1855 இல் ஞானஸ்நானத் திருச்சபை போதகர் அருள்திரு . ஜான் அருளப்பன் அவர்களின் மூலமாக வேதபோதகம் என்ற பொயருடன் ஞானஸ்நானம் பெற்றார்.
பின்னர் சபை ஊழியராகவும் , போதகராகவும் ஆகி சிறப்பான பணி செய்தார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory