சிறையில் சீகன்பால்க்*
வியாபாரத்திற்காகத் தரங்கம்பாடி வந்த பெரும் செல்வந்தர்களாகிய வியாபாரிகள் தரங்கம்பாடியில் உள்ளப் பெண்களோடு குடும்பம் நடத்தினர்.
தங்கள் வியாபாரம் முடிந்து போகும்பொழுது அப்பெண்களையும் , பிள்ளைகளையும் ஆதரவற்றவர்களாய் விட்டு விட்டுச் சென்றனர்.
அப்படிப்பட்டப் பெண்கள் நிர்க்கதியாய் நின்றார்கள்.
தரங்கம்பாடியை ஆண்ட டென்மார்க் அதிகாரிகள் அதைக்குறித்து அக்கரை கொள்ளவில்லை.
அவர்கள் செல்வந்தர்களான வியாபரிகளுக்கே ஆதரவாயிருந்தனர்.
அந்தப் பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாயிருந்தது.
ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவி செய்யும்படியாய் *சீகன் பால்க்* முயன்றார்.
அரசாங்கத்திற்கு அப்பெண்ணை மனு கொடுக்கச் செய்தார்.
தாங்கள் செய்யும் அநியாயங்களை ஊழியர்கள் மன்னருக்கு அறிவித்துவிடுவார்கள் என்று கவர்னர் பயப்பட்டார்.
ஏழைப்பெண் மனுகொடுக்க உதவியது சீகன்பால்க் என்பதையறிந்த கவர்னர் ஹேசியஸ் , சீகன்பால்க்கைச் சிறையிலடைத்தார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment