புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அரிசிக் காணிக்கை

அரிசிக் காணிக்கை*
1829 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாத்தான்குளம் ஆலயத்தில் *மார்க்க துண்டுத்தாள் பிரசுரச் சங்க* செலவிற்காகக் காணிக்கையாக எழுபத்தைந்து படி அரிசி கொண்ட மூடைகளை அருளூர் உபதேசியார் முத்தையன் படைத்தார்.
அவருடைய மனைவி தாயாரளாயி அம்மாள் சோறு சமைக்கும்பொழுது ஒரு கைப்பிடி எடுத்து சேகரித்தவைகள் அந்த அரிசி மூடைகள் . ஷ்மிட் ஐயர் பாளையங்கோட்டைக்குச் சென்று ரேனியஸ் ஐயரிடம் இதை அறிவித்தார்.
*ரேனியஸ் ஐயர்* CMS உபதேசிமாருக்கு அதை அறிவித்து எல்லாச் சபைகளிலும் “ *அரிசிக் காணிக்கை*' ' சேகரிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
இன்று நம்முடைய திருநெல்வேலி சபைகளில் மாத்திரமல்ல இந்தியாவின் அநேக சபைகளில் *அரிசிக் காணிக்கை* கொடுக்கும் பழக்கமுள்ளது.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory