சுதேசக் குருமாரை குறித்த ஏமாற்றம்*
சுதேசக் குருமாரின் ஊழியத்தினால் ஜாண் தாமஸ் ஐயர் ஏமாற்றம் அடைந்தார் . *தங்களுக்குக் கொடுத்த பதவியினால் ஞாயிற்றுக் கிழமை மட்டும் பணிகளை ஆலயத்தில் பிரசங்கம் செய்தனர்*. மற்ற உண்மையான சபை உபதேசியார்கள் செய்ய வேண்டுமென நினைத்தனர்.
இவர்களை ஒரு ஜரோப்பிய பேராயர் கவனிப்பது கூட கூடாத காரியம் , ஒரு இந்திய உதவிப் பேராயரை நியமித்தாலும் தன்னுடைய வேலையைப் பேராயர் செய்கிறாரா எனப் பார்க்க ஒரு ஐரோப்பிய பேராயர் தேவை என்று ஜாண் தாமஸ் வேதனையோடு எழுதுகிறார்.
ஜாண் தாமஸ் ஐயரின் வாஞ்சை இந்தியர்கள் பொறுப்பெடுக்க வேண்டும் . *இந்தியத் திருச்சபை உருவாக வேண்டும்*. இந்தியப் பேராயரை நியமிக்க வேண்டும் என C . M . S . தாய் சங்கத்திற்கு இதற்காகக் கடிதம் எழுதி எதிர்ப்புகளைக் கண்டு , தோல்விகளையும் , ஏமாற்றத்தையும் சகித்தார்.
இறுதியில் *சுதேசத் திருச்சபை மன்றம்* உருவானது . ஆனால் அநேக ஊழியர் குருவாக ஊழியம் செய்ததில் உள்ள குறைகளைக் கண்டு ஜாண் தாமஸ் ஐயர் துயருற்றார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment