திருச்சபையில் சங்கப்பணம் திட்டம் வந்த வரலாறு
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடை பெற்ற கிறிஸ்தவ சமயப்பணிகளுக்கான பணத்தேவையைச் சபைகளிலிருந்தே பெற வேண்டும் என ரேனியஸ் எண்ணினார்.
எனவே தனது ஆலோசனையை 20 . 06 . 1833 அன்று தெரிவித்தார்.
“ ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பத் தலைவனும் ஒரு கால் பணம் அதவாது 23 காசுகள் ஓர் ஆண்டிற்கு ஒருமுறை காணிக்கையாகத் தர வேண்டும் , இது சமயப்பணிகளுக்கென்று செலவிடப்படும் " என்று கூறினார் .
இதுவே *சங்கக் காணிக்கை* என்று பெயர் பெற்றது.
ரேனியசின் இந்த ஆலோசனையை அக்காலத்திலிருந்த சுமார் 300 சபைகளில் தெரிவித்த போது , அக்காலத்திலிருந்த சுமார் 300 சபைகளில் டோனாவூர் ஒன்றைத் தவிர மற்றனைத்தும் அதற்கு ஒப்புதல் தந்தன.
இதற்கான காரணம் டோனாவூர் சபையில் அவ்வப்பொழுது சில பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர் 'இராமசாமி ' என்பவர்.
இவர்தான் இவ்வூரில் முதல் கிறித்தவரானவர்.
சபைத்தலைவராகவும் இருந்தவர் . இவர் தனது சபையாரிடம் *“ சங்கப்பணம் ”* என்ற பெயரில் இப்பணத்தை வசூலிப்பதற்கு மிஷனெரிமார் ஏதோ தகாத காரணங்கள் கொண்டுள்ளார்கள் என்று கற்பனை செய்து சங்கக் காணிக்கை கொடுக்க மனமுடையவர்களையும் கொடுக்கக் கூடாதெனத் தடுத்து விட்டார் ” எனவே சங்கப் பணம் பெறுவதற்கான சரியான நோக்கத்தை சமய பணியாளர்கள் எடுத்துக் கூறியும் இராமசாமி என்பவர் அதை கேட்கவில்லை.
எனவே , ரேனியதும் அதனை வற்புறுத்திக் கேட்காமல் விட்டுவிட்டார் , சில மாதங்கள் சென்ற பின் மீண்டும் டோனாவூரில் காலரா நோய் ஏற்பட்டு 21 போ மரித்தனர் .
அதில் 7 பேர் கிறித்தவர்கள் .
கடந்த ஆண்டு ஏற்பட்ட காலராவில் ஒரு கிறித்தவர்கள் கூட மரிக்கவில்லை என்பதை எண்ணிய சபை மக்கள் இது கடவுளின் தண்டனை எனக்கருதி மனம் வருந்தினர் . “ தாங்கள் சங்கக் காணிக்கையைத் தர மறுத்த பாவத்துக்காகத் தாங்கள் தண்டிக்கப்பட்டதாகப் புலம்பியழுதார்கள்.
சபைத் தலைவரான இராமசாமி நாடார் உட்பட அனைவரும் மிஷனெரி ஷாப்வற்றனர் ஐயரிடம் ஓடினார்கள்.
மனப்பூர்வமாக சங்கக் காணிக்கையைக் கொடுத்து விடுவோம் என்று வாக்குப் பண்ணினார்கள். வாதையும் நின்றது . இச்சம்பவமும் டோனாவூரில் , மக்கள் கிறித்தவத்தின் மீது பற்றுதல் ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment