மிஷனரி வில்லியம் பூத் பிறந்த தினம்*
ஏப்ரல் 10
ஏப்ரல் 10
மாபெரும் சாதனை உலகம் கண்ட மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் வில்லியம் பூத் என்பவர் ஒருவர்.
இவரே " *இரட்சண்ய சேனை "* என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர் .
இராணுவ வீரர்களைப் போன்ற உடை , பதவிகள் போன்றவை இரட்சண்ய சேனை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
ஒரு சேனை அணிவகுத்து எதிரியின் மீது போர் தொடுக்க செல்வது போல் ஒரு பட்டணத்தில் நற்செய்தி ஊழியம் செய்ய இவர்கள் புறப்படுவார்கள்.
ஆரம்பத்தில் *" கிறிஸ்தவ மிஷன் "* என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கம் , இரட்சண்ய சேனையாக மாறி , வில்லியம் பூத் காலத்திலேயே 71 தேசங்களில் பரவியது.
லட்சக்கணக்கான கிறிஸ்துவை அறியாத மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினர்.
ஏழை , எளிய மக்களின் கஷ்டங்களைக் கண்டவில்லியம் பூத் அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.
விழுந்து போன சமுதாயத்தை சீர்தூக்கவும் , வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்ட ஏழை மக்களை உயர்த்தவும் , *" இருளடைந்த இங்கிலாந்து "* என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
1855ம் ஆண்டு கேத்தரினை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு , அவர் கொடுத்த ஊக்கத்தினால் ஆத்தும ஆதாய வீரராகவும் , இங்கிலாந்தின் சிறந்த எழுப்புதல் வீரராகவும் மாறினார்.
திறந்தவெளி ஊழியம் , தொழிற்சாலை ஊழியம் , குடிசைப் பகுதி ஊழியம் , குடிகாரர்கள் மத்தியில் ஊழியம் என பலவகையான ஊழிய முறைகளை மேற்கொண்டார்.
வில்லியம் பூத் அவர்களால் 27 மில்லியன் மக்களுக்கு உணவும் , 11 மில்லியன் ஏழை குடும்பங்களுக்கு வீடுகளும் , 9ஆயிரம் பேருக்கு வேலைகளும் கிடைத்தன . இரட்சண்ய சேனையின் ஒப்பற்ற தளபதியாகவும் , ஏழைகளின் தலைவனாகவும் வாழ்ந்த ஜெனரல்பூத் உண்மையிலேயே வியத்தகு மனிதர்.
இவர் பிறந்தது இதே நாளில்தான்.
உதக மண்டலத்தில் உயர் தொண்டு* 1858 - 71
தஞ்சையிலிருந்து 1858ம் ஆண்டு மலைப்பகுதியில் பணிபுரிய உதகமண்டலம் சென்றார்.
நீலகிரியிலுள்ள ஊட்டியில் தம்முடைய மிகுந்த முயற்சியால் பாடசாலை ஒன்றை அமைத்துப் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார் , அப்பள்ளியில் தொடக்கத்தில் மூன்று மாணவர்களே பயின்றனர்.
அவர்களுள் ஒருவர் தம் மகனார் , மற்ற இருவர் மாவட்ட ஆட்சித்தலைவரின் பிள்ளைகளாவார் ஒரு பெரிய நூல் நிலையத்தையும் ஊட்டியில் அமைத்தார்.
1859ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தைப் புதியதாக அமைத்தவர்களுள் இவரும் ஒருவர் ஆனார்.
எருமை மாட்டை மேய்க்கும் தொழிலையுடைய தோடர்கள் வாழும் ஊர் மந்து என்பதாகும்.
ஒன்றைக்கல் மன்று என்பதே திரிந்து ஒத்தைக்கல் மந்து , ஒட்டகமண்டு என்றாயிற்று என்று சிலர் கருதுகின்றனர்.
(போப்பையருக்கு 1864ம் ஆண்டு காண்டர்பரி டி . டி . பட்டம் அளித்து கெளரவித்தது)
ஜி யூ போப் வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ..
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment