புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தேவாலயக் கீர்த்தனங்கள்

தேவாலயக் கீர்த்தனங்கள்*
சில கிராமங்களில் சிபைகள் தோன்றி எண்பது அல்லது எழுபது வருஷமாகிறதென சொல்லிக்கொள்ளுகிறார்கள் .
ஓர் சபையின் ஜீவியத்தில் எண்பது வருஷம் நீடித்தகாலமென நாம் சொல் துணிகிற தில்லையெனினும் அக்காலத்தின் அநுபவமும் , தேர்ச்சியும் அதில் காண்க எவரும் எதிர் பார்ப்பதுண்டு.
ஆனால் கிராம சபைகள் அநேக விஷயங்களில் துவக்கத்திலிருந்தபிரகாரமே இப்பொழுதும் இருப்பதை அல்லது ஒருவேளை சற்று தளர்ந்து காணப்படுகிறதுமுண்டு.
இக்காரியத்தை அக்கிராமம் ஆலய ஆராதனைகளுக்குப் போனால் எளிதில் தெரியவரும் , திருஷ்டாந்தமாக ஒவ்வொரு சங்கீதத்துக்குப்பின் பாடப்படும் பிதாவுக்கும் , குமாரனுக்கும் பரிசுத்தாவிக்கும் மகிமையுண்டாவதாக " என்னும் கீர்த்தனம் ஒரே இராகத்தில் வருஷக்கணக்காயும் , தலைமுறை தலைமுறை யாயும் பாடப்படுகிறதினால் சரியான ராகமும் மறந்து “ தாளமும் இழந்து தவளை தண்ணிக்கிழுக்கிறது.
ஒணன் வேலிக்கிழுக்கிறதென்பதற்கொப்பாக அவ்வருமையான கீர்த்தனம் பல திசையிலும் இழுபடுவதைப் பார்த்தல் பரி தாபம்.
மற்றும் கீர்த்தனைகளின் கதியும் அவ்வாறே , எழுதினவன் எட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பதுபோல் அனேக கீர்த்தனைகள் நம்முடையவர்கள் வாயில் படுகிறபாடு நிரம்ப , தாளம் தப்பினாற் கூளம் , ஆகவே இவ்விஷயத்தைச் சற்று கவனிக்கின் கீர்த்தனைகள் பாடுவதில் அதிக சீர்திருத்தஞ் செய்யலாமென நம்பலாம்.
புதிது புதிதான இராகங்களைக் கற்கவேண்டும் , இந்தியர்கள் பொதுவாக வழக்கத்தையே விரும்பி அனுசரிப்பதுண்டு .
சில விஷயங்களில் அது நன்மையாக விருப்பினும் , அநேக விஷயங்களில் முன்னேற்றத்தையும் விர்த்தியையும் முடமாக்கிவிடுகிறது.
மேலும் சுரமண்டலம் , பிடில் , மிர்தங்கம் , வீணை , ஜாலர் முதலிய வாத்தியங்களோடு ஆலைய ஆராதனைகளில் பாட அப்பியாசிப்போமானால் மிக நன்றாயிருக்கும்.
ஆனால் இவ்வித வாத்தியங்களை ஆராதனைகளில் உபயோகிப்பதற்குத் தகுந்த அப்பியாசமும் பிரயாசமும் எடுக்கவேண்டும்.
வரலாற்று புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory