*ஒன்றுபட்ட நெல்லைத் திருமண்டலத்தில் ஸ்தோத்திரப்பண்டிகைகளின் தொடக்ககால வரலாறு - 1*
தற்போதைய நெல்லை, தூத்துக்குடி - நாசரேத் மற்றும் மதுரை திருமண்டலத்தின் CMS & SPG மிஷன் பணித்தளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே ஒன்றுபட்ட நெல்லைத் திருமண்டலம்.
மகாகனம்.A.A.வில்லியம்ஸ் அத்தியட்சர் காலக் குறிப்புகளில், தேவாலய பிரதிஷ்டைக் கல்வெட்டுகளில்
Tinnevelly - Madura Diocese என நெல்லைத் திருமண்டலம் அழைக்கப்பட்டு வந்திருப்பதை பார்க்க முடிகிறது.
ஒன்றுபட்ட நெல்லைத்திருமண்டல ஸ்தோத்திரப்பண்டிகைகளின் தொடக்கம் நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களால் 09.07.1834 ல் பாளையங்கோட்டையில் தொடங்கப்பட்ட மாம்பழச்சங்கமே.
கனம்.ரேனியஸ் ஐயரவர்களுக்குப்பின் இடையில் நின்று போன மாம்பழச்சங்கம் 1849 ல் கனம்.பெற்றிட் ஐயரவர்களால் புதுப்பிக்கப்பட்டது.
குரங்கணி முத்துமாலையம்மன் ஆனித்திருவிழா நடைபெறும் அதே நாளில் பாளையில் அலங்காரப்பந்தலில் மாம்பழச்சங்கம் தொடங்கப்பட்டதால் அக்காலம் புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பின்வாங்காமல் கிறிஸ்துவில் நிலைத்திருக்க *மாம்பழச்சங்கம்* பேருதவியாக இருந்தது.
மாம்பழச்சங்க வெற்றியைப் பின்பற்றி CMS மிஷனின் சர்க்கிள் தலைமையிடங்களில் அந்தந்த சர்க்கிளுக்குட்பட்ட கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து கொடைவிழாக்கள் அதிகம் நடைபெறும் ஆனி, ஆடி மாதங்களில் அலங்காரப்பந்தலில் மூன்றுநாள் தபசஉற்சவம் எனும் ஸ்தோத்திரப்பண்டிகையை நடத்த CMS மிஷனரிகள் திட்டமிட்டனர்.
அப்போதைய CMS தலைமை மிஷனரியான கனம். உவாக்கர் ஐயரவர்கள் 1891 ல் முதன்முதலாக சிவகாசி சாட்சியாபுரத்தில் தொடங்கினார். CMS ன் பிற சர்க்கிள் தலைமையிடங்களான நல்லூரில் 1892 லும் மெஞ்ஞானபுரத்தில் 1893 லும் 1894 ல் டோனாவூர் மற்றும் சுவிசேஷபுரத்திலும்
1895 பாளையிலும், 1896 ல் சுரண்டை மற்றும் பண்ணைவிளையிலும் ஸ்தோத்திரப்பண்டிகைகள் தொடங்கப்பட்டது.
*கூட்டம்* என்றழைக்கப்பட்ட இப்பண்டிகை மிகுந்த வவேற்பைப் பெற்றது. (தொடரும்)
*ஜா.ஜான்ஞானராஜ்*
*கல்லிடைக்குறிச்சி*
No comments:
Post a Comment