ஈரோட்டின் மருத்துவ தாய் என்று போற்றப்படும் டாக்டர் ரீஸ் மற்றும் டாக்டர் போலார்டு.
நம் கடவுளின் அற்புதத்தை பாருங்கள் ஈரோட்டிற்க்கு வந்த மருத்துவ மிஷனரிகளின் பிறந்த நாள்
அடுத்தடுத்த நாள்களில்.....
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரோட்டுப் பகுதியில் பிளேக், மலேரியா, காலரா, அம்மை முதலிய நோய்களால் மககள் பெரிதும் துன்புற்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தக்க மருந்தும். வழிப்புணர்வும் இல்லாததே இதற்குக் காரணம். நாட்டு மருத்துவம் பெரிதும் பலனளிக்கவில்லை. இந்நிலை கண்டு வருந்திய பிரப் துரை அவர்கள் 1909-ஆம் ஆண்டு வேலூரிலிருந்து
டாக்டர் மைகன்சி ரீஸ் என்ற அம்மையாரை அழைத்துக் கொண்டு வந்து தன் பங்களா முன்னர் கொட்டகை அமைத்து மக்களுக்கு இலவச மருத்தும் செய்தார். மூன்றாண்டுகள் பணியாற்றிய மைகன்சி ரீஸ் Rev T.C . விட்னி யை திருமணம் செய்து கொண்டு விடை பெற்றுச் சென்றுவிட்டார்.
மருத்துவத்தின் தேவை அதிகமாகவே டாக்டர் மிஸ் ஹில்டா போலார்டு அம்மையாரை வேலூரில் டாக்டர் ஐடா ஸ்கடர் உடன் 1913 ஆண்டு முதல் 1917 வரை ஆற்காடு மெடிக்கல் மிஷனில் பணி செய்து பிரப் துரையால் ஈரோடு பகுதிக்கு மருத்துவப் பணிக்கு அழைத்து வரப்பட்டார்.
சிறப்பான மருத்துவப் பணியால் எல்லோராலும் இவர் 'போலார்டம்மா' என்று அன்பாக அழைக்கப்பட்டார்..
நன்றி ரமேஷ் ஆல்பட்
No comments:
Post a Comment