புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சகோதரி கிரேஸ் வயலட் ஆரோன்

சகோதரி கிரேஸ் வயலட் ஆரோன்  106 வது  பிறந்த நாள்
இன்றைய நாளில் ஈரோட்டில் பெண்கள் உயர்கல்வியில் சிறந்து  விளங்க இவருடைய பங்கு சிறப்பானது   

1913 : ஜூன் 23 தேதி 1913 ஆண்டு பெங்களூரில் பிறந்தார். 

1952 : தென்னிந்திய திருச்சபையின் முதல் சகோதரியாக நியமனம்

1953 : கோவை  திருமண்டலத்தின் பெண்கள் ஐக்கியதின் செயலாராக  
            பணியமர்த்தப்பட்டு. ஈரோட்டில் பணியாற்றினார்.

1961 : அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கு சென்று ஓராண்டு   நீயூயார்க் ஐக்கிய 
            இறையியல் மடத்தில் பயின்றார்.

1968 : தென்னிந்திய திருச்சபையின் பொது செயலாராக பொறுப்பேற்றார்.

1973 : மீண்டும் கோவை திருமண்டலத்திற்கு வருகை. ஈரோட்டில்  மழலையர் 
            பள்ளி தொடக்கம். ஈரோட்டில்  மகளிர் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக
           உயர்த்திய  பெருமை இவரையே சாரும்.  இப்பள்ளியின் முதல        
           தாளாளராக  பொறுப்பேற்றார்

1976 : கோவைத் திருமண்டலத்திலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு  பெங்களூரில்
            உள்ள் விசுராந்தி  நிலையத்தின் {தென்னிந்திய  திருச்சபை மகளிர் 
             இல்லம்  காப்பாளரானார்.

1979 : விசுராந்தி  நிலையத்தின்  காப்பாளர் பொறுப்பிலிருந்து   ஓய்வு பெற்றார்.

1980 : நவம்பர் திங்கள் 7 ம் தேதி தனது 67 வது வயதில்  காலமானார்.   
            தென்னிந்திய திருச்சபைக்கு ஒரு பெண்   பணியாளர்  என்ற முறையில் 
           தொடர்ந்து 26  ஆண்டுகள் தன்    முழுப்பணியையும் இயேசுவிற்காக
          அர்ப்பணித்தார்.

இவருடைய கல்லறை வாசகம் :
                   நான் கர்த்தருடைய வீட்டிலே
                   நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

ரமேஷ ஆல்பட்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory