புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜான் ஃபிஷர்

*தூக்கு மேடைக்குச் செல்லும்போது கையில் வேதத்துடன் சென்ற ஜான் ஃபிஷர் நினைவு தினம் ஜுன் 22*

உள்ளதை  உள்ளதென்றும் , இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் . இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் .

வேத வசனம் பற்பல காரியங்களில் நம்மை எச்சரித்து உணர்த்துகின்றது . நாம் தவறுகள் செய்தல் கூடாது . அதேவேளையில் , தவறு செய்கிறவர்களுக்கு துணை நிற்கவும் கூடாது .

கி . பி . 1469ஆம் ஆண்டு , இங்கிலாந்தில் பிறந்த ஜான் ஃபிஷர் தீமைகளுக்கு எதிராக எதிர்த்து நின்றார் . அப்போதைய அரசன் ஹென்றி 8 சில தீமையான முயற்சிகளைத் துணிந்து செய்ய முற்பட்டான் . அவன் தனது மனைவியைத் தள்ளிவிட்டு வேறொரு பெண்ணை விவாகம் செய்ய முற்பட்டான் . இதற்குப் பலர் உடன்பட்ட கருத்துக் கூறினாலும் , ஜான் ஃபிஷரோ முற்றிலும் எதிர்த்து நின்றார் . அரசனின் தவறை சுட்டிக் காட்டினார் . தவறு செய்பவர் அரசனாயினும் , அதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதில் உறுதியானார் .

இதனால் ஹென்றி 8 அரசன் தானே அரசிற்கும் , மதத்திற்கும் தலைவன் என்று தன்னை பிரகடனப்படுத்தினான் . எனவே , தனக்கு கீழ்ப்படியாத எவரையும் கொலை செய்ய முற்பட்டான் . ஃபிஷர் இவ்வறிப்பால் சிறைப்பிடிக்கப்பட்டார் .

அரசனுக்குக் கீழ்ப்படியும் வரை சித்திரவதைகள் செய்யப்பட்டார் . ஆனால் போதகரான இவரோ கிறிஸ்துவின் போதகத்தைத் தள்ளிவிட மறுத்து விட்டார் .

உண்மையை உண்மையென்றும் , தவறுகளைத் திறம்பட சுட்டிக் காட்டியும் தன் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தினார் .

அது ஒரு அதிகாலை வேளை . திடீரென ஒரு அறிவிப்பு ஜான் ஃபிஷருக்கு கொடுக்கப்பட்டது . காலை 5 மணிக்கு தூக்குத் தண்டனை என்பதே அச்செய்தி . பதட்டமோ , பயமோ இல்லாமல் தன் வேத புத்தகத்தை திறந்தார் ஃபிஷர் . ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார் . இறைவனுடைய செயல்களை எண்ணிப் புகழ்ந்தார் .

இரண்டு மணி நேரங்கள் நிம்மதியாக படுத்து உறங்கினார் . இறைவனின் சித்தத்திற்கு தன்னைக் கையளித்தார் .

தூக்கு மேடைக்குச் செல்லும்போது கையில் வேத புத்தகமே அவர் துணையானது .

உடல் தூக்கில் தொங்க , உயிரோதன்னைத் தந்த இறைவனிடம் சென்றது .

------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*

📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory