புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருப்புளியங்குடி திருச்சபை வந்த வரலாறு

*திருப்புளியங்குடி திருச்சபை வந்த வரலாறு*

ஸ்ரீவைகுண்டத்திற்குக் கிழக்கில் திருப்புளியங்குடி என்ற ஒரு சிறு கிராமம் உள்ளது.

நம்பி என்பவர் அதில் வாழ்ந்து வந்தார் .

1818ஆம் ஆண்டு அவருடைய மூன்றாம் மகன் கையில் புதிய ஏற்பாடு கிடைத்தது .

வேதத்தை வாசித்த அக்குடும்பத்தினர் ஒரே மெய்யான தேவனை வணங்க முடிவு செய்தனர் .

நம்பியின் மூன்றாம் மகனை ஹாப்வ் ஐயரிடம் புதிய ஏற்பாட்டைக் கொடுத்தவர் வழி நடத்தினார் .

அவர் சில புத்தகங்களைத் தந்து அதை வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார் .

பின்பு அக்குடும்பம் 1820இல் ரேனியஸ் ஐயரைப் பார்த்தார்கள் . நம்பியின் மூன்றாவது மகன் சுப்பிரமணியன் செமினெரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் .

நம்பியும் அவருடைய குடும்பத்தாரும் ஊராரால் உபத்திரவப்பட்டார்கள் , ஆனால் அவர்கள் பொறுமையோடு இருந்தனர் . அதைக்கண்டு நம்பியின் அண்ணன் மகன் லட்சுமணன் ஆண்டவரைக் குடும்பத்தோடு ஏற்றுக்கொண்டார் .

1823ஆம் ஆண்டு ரேனியஸ் ஒரு ஆலயத்தைத் திருப்புளியங்குடியில் கட்டினார் .

நம்பியின் குடும்பத்தார் அவ்வாலயம் கட்ட உதவி செய்தனர் .

அங்கு ஞானஸ்நானம் கொடுக்க ரேனியஸ் ஏற்பாடு செய்தார் .

நம்பி குடும்பத்தினரைப் பகைவர் அடித்துத் துன்பப்படுத்தினார்கள் . அதில் காயங்களால் நம்பியின் மனைவி மரணமடைந்தார் .

C . M . S . திருச்சபையின் முதல் இரத்த சாட்சி இந்தத் தாயார்தான் ,

1823 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ரேனியஸ் ஐயர் திருப்புளியங்குடி , ஆலயத்தில் நம்பிக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப்பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் .

பின்பு அவ்வூரில் ரேனியஸ் ஒரு பள்ளிக் கூடத்தையும் ஆரம்பித்தார் .

நம்பியின் மகன் சுப்பிரமணியனுக்கு தீத்து என ஞானஸ்நானம் கொடுத்திருந்தார் .

திருப்புளியங்குடி சபை உபதேசியாராகவும் பள்ளி ஆசிரியராகவும் தீத்துவை ரேனியஸ் நியமித்தார் .

------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*

📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory