*கிறிஸ்துவின் பணியில் ஈடுபடுவதின் மூலம் என் துக்கத்தை மறப்பேன் என்ற ஜேம்ஸ் சால்மர்ஸ்*
விதைத்த வசனம் விருதாகவில்லை
அது ஒரு விருந்து சாலை . முக்கியமான கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஜேம்ஸ்சால்மரும் , அவரது மனைவியும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டிருந்தனர் .
கூட்டம் முடிந்ததும் விருந்து பரிமாறப்பட்டது . பெரிய தட்டு ஒன்றில் எண்ணெயில் பொரித்து எடுக்கப்பட்ட பெரிய இறைச்சித்துண்டு , அது என்ன என்று உற்றுநோக்கிய சால்மரின் மனைவிக்கு ஆச்சரியம் காத்திருந்தது .
அது என்ன தெரியுமா ? ஒரு மனிதனின் மார்பு பகுதி . எப்படியிருக்கும் ? நியூ கினியா என்ற தீவு .
நாகரீகமற்ற , பாவம் நிறைந்த , மூடத்தனமிக்க , கொடூர பழங்குடிகள் வாழும் இடம் அது ,1877ம் ஆண்டு சால்மரும் அவரது மனைவியும் அப்பகுதிக்குக் கடந்து சென்றார்கள்.
மனிதர்களையே சாப்பிடும் அக்கொடூர மக்களுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துக் கூறினார்கள்.
எதிர்பாராதவிதமாக சால்மரின் மனைவி பெலவீனமாகி மரித்துப் போனார்கள் .
ஆனாலும் கிறிஸ்துவின் பணியில் ஈடுபடுவதின் மூலம் என் துக்கத்தை மறப்பேன் எனக் கூறி இன்னும் தீவிரப் பணியில் ஈடுபட்டார் .
புதிய பழங்குடி மக்களிடம் பழக , அவர்களுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்தார் .
இதனால் மக்கள் இவரின் நண்பரானார்கள் . புதுப் புது தீவுகளுக்கும் சென்று கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்தார் .
1901ம் ஆண்டு கோரிபாரி என்ற தீவிற்குப் பயணமானார் . நரமாமிசம் உண்ணும் பழங்குடி மக்கள் அவர் படகைச் சூழ்ந்து கொண்டனர் . நாளை மறுபடியும் வருகிறேன் என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றார் .
மறுநாள் . சால்மர் தன் உடன் ஊழியர் பாம்கின்ஸ் உடன் அங்கு சென்றார் .
சிறப்பான வரவேற்புடன் அப்பழங்குடிகள் அவர்களை விருந்து சாலைக்கு அழைத்து சென்றனர் . திரென உருட்டு கட்டைகளால் தாக்கப்பட்டனர் .
அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன .
பழங்குடியினருக்கு விருந்தாக்கப்பட்டனர் . என்னே கொடூரம் ! ஆனால் , சால்மர் விதைத்தவசனம் விருதாவாகவில்லை
பின்னாட்களில் மனந்திரும்பிய மக்கள் எண்ணற்றோர் . இன்று அம்மக்கள் தேவனுடைய பிள்ளைகளாக வாழ்கின்றனர் ,
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment