புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -15

நீங்கள் உண்மையிலே கிறிஸ்தவரா?
திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -15
நீங்கள் உங்களுக்குள் கேட்க வேண்டிய கேள்விகள்
ரேனியஸ் ஐயர் அவர்கள் திருநெல்வேலி முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு பல ஊள்ளூர்வாசிகளை தேவனுக்குளாக வழிநடத்தினார். அந்த காலத்தில் இங்கு வந்த வொல்ப் என்னும் யூத மிசனரி ரேனியஸின் உழைப்பை பார்த்து பின்வருமாறு கூறுகிறார்
“உண்மையாகவே இவர் ஒரு மிசனரி. அப்போஸ்தலர்கள் காலத்திற்கு பின்பு தோன்றியவர்களில் மிகப்பெரிய மிசனரி இவர் என நான் நம்புகிறேன்”
1818 ஆம் ஆண்டு குற்றாலம் ரஸ்தாவில் திறக்கப்பட்ட ஹாப் ஐயரின் ஆங்கிலப்பள்ளி மூடப்பட்டபோது அதை ஒரு சிற்றாலயமாக மாற்றினார். அதில் மக்களை சந்திக்கும் இடமாக ஏற்படுத்தி கொண்டார். அவர்கள் அவரிடம் பல நுட்பமான கேள்விகளை கேட்டனர். ஆனால் அவரோ ஒரு கேள்வி விடாமல் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் தெளிவாக பதிலளித்தார்.
பாளையங்கோட்டையை மையமாக கொண்டு ஊழியம் செய்த இவர் பல கிராமங்களை சந்தித்தது மட்டும் அல்லது கிறிஸ்தவர்கள் எங்கு எல்லாம் துன்புறுத்தப்பட்டார்களோ அவர்களுக்கு என்று தனி குடியிருப்பை ஏற்படுத்தி கொண்டுத்தார். அவ்வாறு வந்தது தான் டோனாவூர்.
ரேனியஸ் மக்களை சந்திக்கும் பொது அவர்களிடம் பின் வரும் கேள்விகளை கேட்பார். அதற்க்கு அவர்கள் ஒத்து கொண்டால் மட்டுமே கிறிஸ்தவர்கள். இந்த கேள்விகளை நாம் நமக்கும் கேட்டு கொள்வது அவசியமாகிறது. நாம் உண்மை கிறிஸ்தவர்களா ??
கேள்விகள்
1.சத்தியத்தின் அறிவை அறியாமையில் இருக்கிற உங்கள் மக்களிடையே சத்தியத்தை எடுத்து செல்வது உங்கள் தலையான நோக்கமா ?
2.பிறமக்கள் செய்யும் சடங்குகள், செயல்பாடுகள் மற்றும் பாவசெயல்கள், சண்டைகள் ஆகியவை வானத்தையும் பூமியையும் படைத்தவர் முன்பு பாவமானது என்று ஏற்று கொள்கிற்களா?
3.உண்மையில் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் ஆறுதல் பெற்று இருக்கிரிர்களா?
இந்த கேள்விகளுக்கு உங்களால் ஆம் என்று பதில் அளித்தால் நீங்கள் தான் கிறிஸ்தவர்.
ரேனியஸ் தன்னிடம் வரும் மக்கள் மிகவும் விசுவாசத்தில் உறுதி படைத்தவர்களாக இருக்க வேண்டுமென்று இருந்தார்.
ரேனியஸ் ஐயரின் ஊழியத்தின் கனிகளில் முதற்பலனானவர்கள் நாம். கிறிஸ்து இயேசு இந்தியாவில் அறிவிக்கபட காரணமாக இருந்த கருவிகள் நாம். நமக்குள் இக்கேள்விகளை கேட்டு பாப்போம்
தொடரும்
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory