புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வெள்ளாளன்விளை பரி . திரித்துவ ஆலயம்

வெள்ளாளன்விளை பரி . திரித்துவ ஆலயம்*
இக்கோவில் இருந்த இடத்தில் 100 வருடங்களுக்கு முன் ஒரு குலதெய்வக்கோவில் இருந்தது .
அதில் கணியான் கூத்துக்களும் , ஆடு , மாடு , கோழி பலியும் நடக்குமாம் .
கனம் தோமாஸ் ஐயரவர்கள் குதிரை மேலேறி ஆலந்தலைக்குச் செல்லும் வழியில் அந்த இடத்தில் ஒரு ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறும் பொழுது அவர் குதிரையைக் கல் எறிவார்களாம் .
அவர் தரையில் நின்று ' கடவுளே இந்த இடத்தில் ஒரு பெரிய ஆலயம் கட்டப்படவேண்டும் ' என்று ஜெபித்தாராம் .
அப்படியே அந்த ஊர்த் தலைவர்களில் ஒருவராகவும் , பின் கிராம முனிசிப்பாகவும் இருந்த ஒருவரைக் கிறிஸ்தவராக்கி , அந்த இந்துக்கோவில் இருந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டி வைத்தார் ..
பின் காலஞ்சென்ற மகாகனம் அசரியா பிஷப் அவர்கள் , தகப்பனார் கனம் வேதநாயகம் அவர்கள் குருவாக நியமிக்கப்பட்டார்கள் . அவர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது .
1875ம் வருஷம் பிரதிஷ்டை யானது .
அவருக்கு மிக உதவியாய் இருந்தது அந்தக் கிராம முனிசீப் .
அவர் பேரன் ஒருவர் மிஷ்ன் விசாரணை உபாத்தியாராக இருந்து 1931ம் வருடம் ஓய்வு எடுத் துக்கொண்டு அங்கே வந்து மற்ற சபை அங்கத்தினரோடு சேர்ந்து அக்கோவிலின் கூரையைப் புதுப்பித்தார் .
இவர் தான் அவ்வூரிலிருந்து படித்த முதல் கிறிஸ்தவர் .
காலஞ்சென்ற அசரியா பிஷப் பிறந்து வளர்ந்த ஊர் இது .
இக்கோவிலின் பின் பக்கம் அவர்களின் பெற்றோருடைய கல்லறைகளைக் காணலாம் .
கனம் எஸ் . வி . மாணிக்கம் ஐயரவர்கள் இங்கு 25 வருடங்கள் வேலை செய்தார்கள் .
இக்கோவில் கட்டவாவது , அதைப் புதுப்பிக்கவாவது வெளி இடங்களில் பண உதவிக்காகச் சென்றதில்லை .
ஏனென்றால் இந்தச் சபைக்கு 60 ஏக்கர் அருமையான புன்செய் நிலம் உண்டு , இதை அங்கே சர்க்கிள் பொக்கிஷதாரும் அவ்வூர் போஸ்டு மாஸ்டரும் மேல் பார்த்து ஆலய வேலைக்குப் பணம் கொடுத்து வருகிறார் .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory