புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சின்னண்ணன் பேட்டன்

இந்தியர்களுக்கு இந்திய வழிபாட்டு முறையிலேயே இயேசுவைப் பற்றி அறிவிக்கவும் வாழ்ந்து காட்டவும் தங்களைத் தியாகம் செய்த சின்னண்ணன் பேட்டன்*
இன்றைய சமுதாயம் பலவிதமான தீமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது .
மத வெறியினால் ஆண்டுதோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான கொலைகள் , ஜாதி வெறியினால் ஏற்படும் கொடுமைகள் , பண வெறியினால் ஏற்பட்டிருக்கும் லஞ்சம் , அதிகார வெறியினால் உண்டாயிருக்கும் அடிமைத்தனங்கள் இவையாவும் நமது சமுதாயம் சீர்கெட்டுப் போகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன .
இச்சீர்கேடுகளிலிருந்து சமத்துவமான சமுதாயம் எப்படி உருவாக முடியும் ?
இயேசு பெருமானின் அன்பு ஒன்றே இத்தனை சீர்கேடுகளையும் நீக்கி நமது சமுதாயத்திற்கு விடிவைத்தர முடியும் .
எளிமை , தூய்மை , துறவறம் ஆகிய நற்பண்புகளை ஏற்று நமது நாட்டில் அமைதியைத் தர வந்தார் பேட்டன் .
இவரது இயற்பெயர் எர்ணஸ்து பாரஸ்தர் பேட்டன் .
ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவர் .
மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் .
இளமைப் பருவம் முதலே சீரிய கிறிஸ்தவ வாழ்வில் தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார் .
கல்லூரிப் பருவம் . மருத்துவப் படிப்பில் நுழைந்தார் . அங்கே தன் ஆன்மீகச் சகோதரரான *பெரியண்ணன் '* என்று அழைக்கப்படும் சவரிராயன் ஜேசுதாசஸை சந்தித்தார் .
இருவரும் கிறிஸ்துவுக்குள் தங்களை அர்ப்பணித்தார்கள் . இந்தியர்களுக்கு இந்திய வழிபாட்டு முறையிலேயே இயேசுவைப் பற்றி அறிவிக்கவும் வாழ்ந்து காட்டவும் தங்களைத் தியாகம் செய்தனர் .
தமிழ்நாட்டில் திருப்பத்தூர் என்ற இடம் . எளிமையான வாழ்வும் , எதார்த்தமான செயலும் , அன்பான பேச்சும் பேட்டனின் மொத்த வடிவமாக காண்போரை கவர்ந்திழுத்தன .
கிறிஸ்துவின் அன்பை கிராமங்கள்தோறும் எடுத்துரைத்த இச்சேவகர் சிறியவர்களின் சின்னண்ணனாக வாழ்ந்து மறைந்தார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory